பிப்ரவரி 2017 இதழில்

கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் பிரச்சனைகளையும் மனதை உருக்கும் வண்ணம் தனது ஆயிஷா சிறுகதையின் மூலமாக உடைத்துக்காட்டியவர் இரா. நடராசன் அவர்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தர போராடிய அறிஞர்களில் ஒருவராகவும், நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை அளித்தவருமான மணவை முஸ்தபாவைப் பற்றிய இரா. நடராசனுடைய கட்டுரையும் அஞ்சலியும் பிப்ரவரி மாத இதழில்.

‘அதே போல் ஒவ்வொரு புத்தகத்தையும் நமக்குப் பரிந்துரை செய்பவர்கள் அந்தப் புத்தகங்கள் வாயிலாகத் தங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை வாசிப்பின் வழியாக தொடக்கம் முதலே புரட்டிப்பார்க்கும் ஒரே பக்கத்திலேயே அதன் தரத்தை எடை போட்டுத் தேர்ந்தெடுப்பதும், விலக்குவதும்.’
சிங்கப்பூரில் வாசித்தல் பற்றிய உள்ளூர் எழுத்தாளர் திரு. ஷாநவாஸின் பார்வை, கட்டுரை வடிவில்!

இயல், இசை, நாடகம் என்பதே முத்தமிழ். இதில், சிங்கையின் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றும் நாடகக்குழுக்களில் அதிபதி நாடகக் குழுவின் பங்கு மற்றும் அவர்களின் படைப்புகள் ஆகியவற்றைப் பற்றி அலசி ஆராய்கிறது விஜய் சங்கரராமுவின் கட்டுரை.

உள்ளூர் எழுத்தாளர் மற்றும் சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியரான திருமதி அழகுநிலாவின் முதல் புத்தகம் ‘ஆறஞ்சு’. எழுத்தாளர் திரு. மாலன் அவர்களால் பாராட்டப்பட்ட ‘ஆறஞ்சு’ சிறுகதையின் தலைப்பே இந்த தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளை விமர்சித்து, இந்த புத்தகத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறார் நூல் விமர்சகர் மாமன்னன், பிப்ரவிரி மாத இதழில்!

‘இலக்கியம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கோட்பாடுகளையும் முற்றிலும் நிராகரிப்பதாக சொன்ன யூமா, புனைவுகள், கவிதைகள் மட்டுமல்லாமல், கட்டுரைகள் மற்றும் செய்திகளில்கூட கவித்துவம் ஒன்று உணரப்படும்போது அது இலக்கிய ஆக்கமாக ஆகிறது என்றார்.’ வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யூமா வாசுகியுடனான சந்திப்பைப் பற்றிய விரிவான கட்டுரை திரு. சிவானந்தத்தின் கைவண்ணத்தில்!

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்