சங்கக் குடை தாங்கும்விழுதுகள்


சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீகின் 75-ஆம் ஆண்டுநிறைவு விழா 22-10-2016 சனிக்கிழமை மாலை 0700 மணிஅளவில் சிங்கப்பூர் ஒன் ஃபேரர் ஹோட்டலில் இரவுஉணவுடன் நடந்தது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த ஹோட்டல் கூடத்தில் வாப்பா ம்மா மகன் மருமகள்பேரன் பேத்தி என குடும்பம் குடும்பமாக சுமார் 500 – 600 பேர்இருந்தார்கள். பேசிக்கொண்டும் சிரித்தவாறும்வருகிறவர்களை எழுந்து உபசரித்தும், தூரத்துமேசையிலிருப்பவரைப் பார்த்துக் கை அசைத்துமாய்அனைவரும் தங்கள் சொந்த வீட்டிலிருப்பது போலவேஇருந்தனர். அது ஒரு முதல் தரமான ஹோட்டல்; அங்கேபிரதமர் எந்த நேரத்திலும் வருகை தரலாம். இச் சூழல்ஒருவரிடம் வேண்டி நிற்கும் சபை நாகரிகம், Table manners, உதடு பிரியா மவுனம், தீவிர முக பாவனை இவற்றில் எதுவும்அவர்கள் பிரக்ஞையில் இருப்பதாகத் தெரியவில்லை. மனஇறுக்கமற்று இயல்பாக இருக்க முடிகிற அபூர்வமானஇத்தருணங்களை இந்த சிங்கப்பூர்வாசிகளுக்கு வழங்கியசங்கத்தை வாழ்த்திற்று என் நெஞ்சம். மேடையின் இருபுறமும்உயரத்தில் இரண்டு டி.வி.பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. தன்னலம் கருதாது அர்ப்பணிப்பு உணர்வுடன்சமுதாயத்திற்காகத் தொண்டாற்றிய தொடக்க காலச் சங்கஉறுப்பினர்கள் திரையில் தெரிந்தனர். பேசினர். மனம்சிலிர்த்தது. ’எனது கடையநல்லூர் மக்கள்’ என்ற உணர்வு என்மன ஆழத்தில் எங்கோ கசிந்தது. எனக்குள்ளேயேஇருந்துவரும் கடையநல்லூர்வாசி சட் டென மேலெழுந்துமனம் முழுக்க வியாபித்தான்- கணப்பொழுது தான். மேசையில்என்னுடன் உணவருந்திக் கொண்டிருந்த அதுவரை ‘யாரோ’ வாக விலகியிருந்த அந்த சிங்கப்பூர்க் குடும்பம் எனதுசொந்தமானது. அவர்கள் முகம் பார்த்து மெல்லச் சிரித்தேன். அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள், அந்த மேடை,சூழல் அனைத்தும் எனது சொந்தமாகியது. மொழியும் ஊரும்இவ்விதம் பிணைப்பை உருவாக்கும் என்பது உண்மைதான்போலும். ஊரை விட்டு வெளியே வந்தபின்னரே இது தெரியும்என்பதும் உண்மையோ..? மேசையிலிருந்த சிங்கப்பூர்க்குடும்பம் கண் இமையாது டி.வி. திரை பார்த்துக்கொண்டிருந்தது. ‘ ஏய் அங்க பாரு..மாமா. அந்தா அவருஆமினாவின் சாச்சா. அதோ தெரிவது நம்ம பெத்தாப்பா’ எனகுடும்பப் பெரியவர் சொல்லிக் கொண்டு வர சிறார்களின்முகமும் கண்களும் சிரித்தன. சிங்கப்பூர் கடையநல்லூர்முஸ்லிம் லீகின் 75 ஆண்டுகாலப் பணி அர்த்தமுடையதெனஅந்தக் கணம் என்னுள் உரக்கவே சொல்லிற்று.

நிகழ்ச்சி தொடங்கிற்று. மேடையில் மலேயா ஜாமியாகுழுவின் தைரா முழக்கம். தம்- தம் தம்- தம்.; தம்- தம்- தம்- தம். நிச்சலனம் கொண்டது சபை. ஒத்த உருவமும் சம வயதும்கொண்ட உயரமான பத்துப் பன்னிரண்டு இளையோர்இடபுறமும் வலபுறமும் நின்றபடியே மெல்லச் சாய்ந்தாடினர்;ஒற்றைப் பெருங்குரலில் மூலமுதல்வன் அருள் வேண்டியாசிக்கின்றனர். சபையில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டிருந்த இருள் அதிர்கிறது. தைராவின் அளவுச் சத்தம், ஜாமியா குழுவின் அடர்ந்த ஆழமான குரலின் இறைவேண்டல், கண்உறுத்தா மேடை ஒளியமைப்பு………ஒரு காட்சி அற்புதம் கண்முன் விரியும் மாயம் கண்டேன்.

அப்போது ஒரு மேடை அறிவிப்பு கேட்டது.

” நமது பிரதமர் வருகிறார். எழுந்து நிற்க வேண்டாம். அவரவர் இருக்கையில் அமர்ந்து லேசான கரவொலியுடன்பிரதமர் வருகையை வாழ்த்துவோம்”

மேசைகள் நீங்கிய பாதையில் சபை நடுவே நடந்துவருகிறார் பிரதமர். ’நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்டபார்வையும்’ – பழக்கத்தில் தேய்ந்த இச்சொல் உயிர்கொண்டெழுகிறது என்னுள். பிரதமருக்கு முன்னாலும்பின்னாலும் ஒரு சிலர். லீகின் தலைவர் நசீர்கனி ஒருபுறம். மு.அ. மசூது மறுபுறம். நடுவே பிரதமர். அவர்மேடையேறவில்லை. அவருக்கென ஒதுக்கப்பட்ட உணவுமேசைமுன் எல்லோரையும் போல அமர்கிறார். இவ்வளவு எளிமையா..? என்ன கொடுமை ஐயா..? எங்களூர்ச்சந்தைத் திடல் கட்சிப் பேச்சாளன் ஒருவனின் மேடைப்பந்தாவை வீடியோவிலாவது யாரேனும் ஒருவர் பிரதமரிடம்காட்டலாகாதா..?

சங்கத் தலைவர் நசீர் கனி அவர்களின் வரவேற்பு உரை. சரளமான ஆங்கிலம். உறுத்தாத உச்சரிப்பு. சங்கத்திற்காகதங்கள் சக்தி நேரம் உழைப்பு முழுவதையும் மக்கள் சேவையில்அர்ப்பணித்த சங்கத்தின் முன்னோடிகள் பன்னிரண்டு பேரைக்கவுரவித்தார் பிரதமர். சமுதாயத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்புச்செய்தமைக்காக நாற்பதாண்டு காலம் பொதுச் செயலாளராகஇருந்த மு அ மசூது அவர்களையும் கவுரவித்தார்.

அருமையான சிற்றுண்டியும் இரவு உணவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தன.

மு அ மசூது அவர்கள் இறுதி உரையுடன் இரவு சுமார் 0940 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது. சுமார் 0745 மணிஅளவில் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் நிகழ்ச்சி முடிந்தபின்னரே சென்றார்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீகின் சாதனைகள்

1890 லிருந்து முதல் உலகப்போர் முடிவுற்ற 1918-ன் சிலவருடங்கள்: கைத்தறி நெசவைத் தொழிலாகக் கொண்டுஏழ்மையில் வாழ்ந்து வந்த கடையநல்லூர் மக்களுக்குஇன்னும் கடுமையான சோதனைக் காலம். நெசவுத்தொழில்தேக்கம், பஞ்சம், கொள்ளை நோய், வறுமை இவற்றின்கோரப்பிடியில் சிக்கித் தவித்தான் தறிகாரன். வெளிநாட்டிற்குச் சென்றால் பட்டினியில்லாமல் வாழலாம்என்ற நம்பிக்கையில் சில குடும்பங்கள் துணிவுடன்கடையநல்லூரை விட்டு வெளியேறி பினாங்கு வழியாகசிங்கப்பூரில் குடியேறின. சிங்கையில் தஞ்சோங் பகார், சிரங்கூன், கோலாங் முதலான இடங்களில் வாழலாயினர். துறைமுகத்தில் கூலி வேலை, கம்பெனிகளில் எடுபிடி வேலை, உணவுக் கடைகளில் க்ளீனிங், பரிமாறும் வேலை, கட்டிடங்களில் கூலி வேலை என ஆண்கள் கடினமாகஉழைத்தனர். பெண்கள் ஆப்பம் சுட்டு பிள்ளைகள் மூலமாகதெருக்களில் விற்றனர். மசாலா அரைத்துக் கடை கடையாய்ஏறி இறங்கி விற்றுச் சீவனம் கழித்தனர்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்