சுபாஸ் அனந்தன் என்ற பெயர் கேள்விப்படாத சிங்கப்பூர்வாசிகள் இருக்கமாட்டார்கள். நீதித்துறை வட்டாரங்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உழைத்து உருவாக்கியவர். கிரிமினல் வழக்குகளைக் கையாள்வதில் ஆகத்திறமையான வழக்குரைஞர் என்று பெயர்பெற்றவர். சுமார் 2500 வழக்குகளைத் தன் வாழ்நாளில் இவர் கையாண்டிருக்கிறார். எந்த வழக்கிற்கும் விவரங்களைக் குறித்துக்கொண்டுபோய் வாதிட்டது இல்லை. அவ்வளவு அபாரமான நினைவாற்றல். இதில் ஒருமுறை நீதிபதி தீர்ப்பில் செய்த கோளாறையும் சுட்டிக்காட்டி அதில் பிழைதிருத்தம் செய்திருக்கிறார். இறுதி ஆண்டுகளில் உடல் நலம் மோசமடைந்தபோது, வேண்டுமென்றால் அமர்ந்த…