கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விரட்டி மிரட்டிய கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்தத் தொற்றுப் பரவி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் இந்த வைரஸ் முழுமையாக மறைந்துவிடவில்லை. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் அது பரவும் நிலை உள்ளது. சில…