பகல் முற்றிலும் விழித்திராத அதிகாலையில், “மெர்சிங்” செல்லும் பேருந்துக்காக அவன் காத்திருந்தான். அங்கிருந்து “தியோமன்” தீவுக்குச் செல்வதுதான் திட்டம். அதிகாலையின் குளிர்காற்று இனிய நினைவுகளை எழுப்புவது. இருளும் ஒளியும் முயங்குவதால் கிடைக்கும் ஒளியிருள் அல்லது இருளொளி அவனது மனதில் மகிழ்ச்சியை நிரப்பும்.