சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024

0
85
ஷா நவாஸ்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024இல் படைப்பிலக்கியம் குறித்த விவாத அரங்குகள், கருத்துரைகள் பல்வேறு அரங்க நிகழ்வுகளில் முன்வைக்கப்பட்டன. உலகின் பலமுனைகளில் இருந்தும் வீரியமான இலக்கிய படைப்பாளர்கள் கலந்துக் கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் இருந்து முன்னோடி படைப்பாளர்கள் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், சிங்கப்பூர் எழுத்தாளர் கவிஞர் மகேஷ்குமார், முஹம்மது ரியாஸ் (அனிஷா மரைக்காயர்) போன்றோரின் பங்களிப்புகள் சிறப்பாக அமைந்திருந்தன. கானா நாட்டு எழுத்தாளர் கவிஞர் ஜெரோம் கவிதை உலகின் சமய நம்பிக்கை ஆன்மீக உணர்வுகள் அவைகள் நிகழ்த்தும் பரிமாணங்கள் தொடர்பான கவிதை உரை சிறப்பாக அமைந்திருந்தது.

விழாவின் உன்னத தருணங்கள்:

வழிபாடு, தியானம் மற்றும் பிரார்த்தனை போன்ற சமய அனுபவங்கள் எவ்வாறு புதிய கவிதைகளைத் தூண்டும்..

கடும் சிந்தனைவயப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில்

அரங்கேறிய நிகழ்வு .

▾Desmond Francis Xavier Kon Zhicheng-Mingdé

▾Jerome Masamaka

▾மகேஷ் கலந்து கொண்ட நிகழ்வு..

உச்சநிலையில் கவிஞன் பாதிப்பங்குதான் ஞானி. மீதிப்பங்கு  லௌகீகன்..

ஆன்மீகத்தின் முழுநிலவு கண்டு கொந்தளிக்கும் லௌகீகத்தையும், கொந்தளிக்கும் அக்கடற்பரப்பில் நடனமிடும் ஆன்மீகத்தின் ஒளிர்வட்டத்தையும்  மூன்று கவிஞர்களும் விவரித்தார்கள் ,

மகேஷ் தேவ தேவனின் கவிதை வரிகளில்   விளையாடினார்..

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில்  நடைபெற்ற அரங்குகளின் தலைப்புகள் சுவராஸ்யமாக இருந்தன

ஆனந்தவல்லி, மானசா நாவல்

ஆசிரியை லட்சுமி பாலகிருஷ்ணன்

மற்றும் “வெண்மையின் நிறங்கள்”

சித்ரா ரமேஷுடன் ..  கலந்து கொண்ட “நாளொரு மேனி” மிகப் பொருத்தமான தலைப்புடன் சிறப்பான கலந்துரையாடலாக அமைந்தது.