தி சிராங்கூன் டைம்ஸ் - குழு

நிறுவனர் - முஸ்தபா

சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வகையில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் திரு முஸ்தபா அவர்கள் தனது முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மூலம் தமிழ்ப் பணிக்கு உதவிகள் பல செய்து வருகிறார். தனது அறக்கட்டளை தஞ்சை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘கரிகால் சோழன் விருது’ எனும் பெயரில் ஆய்விருக்கை ஏற்படுத்தி சிங்கை, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் சிறந்த நூலுக்கு நடுவர் கொண்டு விருதுகள் அளித்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ், இலக்கியம் வளர்ச்சிக்கென இலாப நோக்கமில்லாத ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழையும் நடத்தி வருகிறார்.

முதன்மை ஆசிரியர் - ஷாநவாஸ்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளங்கலை (இராசயணம்) பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாக துறையில்முதுகலைப் பட்டமும் பெற்றவர்.ஒரு துண்டு மீனும் வன்முறை கலாச்சரமும், ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்”, “அயல்பசி”, “நனவு தேசம்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களும் “மூன்றாவது கை”,ஒலி மூங்கில் இடமும் இருப்பும் சிறுகதைத் தொகுப்பும் காலச்சிறகு (சிராங்கூன் டைம்ஸ் தொகுப்பு) இவரின் சுவை பொருட்டன்று கவிதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, அயல் பசி 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரை விருதையும் ,கரிகாற்சோழன் விருதையும் ,மூன்றாவது கை” சிறுகதை தொகுப்பு 2014 சிங்கப்பூரின் உயரிய புனைவிலக்கிய பரிசையும் ,கு.இராமச் சந்திரா புத்தக பரிசையும் ,நனவு தேசம் சிங்கப்பூர் அ .புனைவு இலக்கிய பரிசையும் வென்றது. 

பொறுப்பாசிரியர் - மகேஷ்

இயந்திரப் பொறியியல் பட்டதாரி. சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார் . சிங்கப்பூர் பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். தங்கமீன் வாசகர் வட்டத்தில் தொடர்ந்து கவிதை, கதை, வாசிப்பு என இயங்கிய இவர் ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம் எடுத்தல், மராத்தான் ஓட்டம், தன்னார்வத் தொண்டூழியம என்று பல திசைகளில் விரிந்து தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் கவிதை, கதைகள் எழுதி வருகிறார் ,இந்தி, உருது மொழிக்கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். உலகின் பல பகுதிகளில் பணி புரிந்ததும், பல்வேறு மொழிகள் கற்றதும், பல மொழி இலக்கியங்களை அணுக முடிந்ததையும் பெரும்பேறாகக் கருதுகிறார். 2012 ஆம் ஆண்டின் “முப்பெரும் விழா”வில் இவரது சிறுகதை சிறப்பு கவனம் பெற்றது. 2017ல் தமிழ்கவிதைப் பிரிவில் தங்கமுனை சிறப்பு விருது பெற்றார்.

ஆசிரியர் குழு - சித்ரா ரமேஷ்

உயிரியல், தமிழ் மற்றும் கல்வியியலில் முது நிலை பட்டதாரி சிங்கப்பூரில் யுவபாரதி இந்திய அனைத்துலகப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராகவும் பொருளாளராகவும் உதவிச் செயலாளராகவும் பணியாற்றியவர். வாசகர் வட்டம் என்ற அமைப்பின் தலைவராகவும்,ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிங்கப்பூர் இலக்கியப் பரிசு தங்க முனைப் பரிசு இவற்றை படைப்பிலக்கியத்திற்காக பெற்றுள்ளார். புதினம் அல்லாத வகையில் இவரது ஆட்டோகிராஃப் மற்றும் நகரத்தின் கதை இரண்டு நூல்களும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. சிங்கப்பூர் தேசியக் கவிதைத் திருவிழாவுக்காக தொகுக்கப்பட்ட கவிதை நூல்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் இலக்கியப் பரிசு மு ஜீவானந்தம் நினைவுப் பரிசு இவற்றைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசியக் கவிதைப் போட்டியில் இரு முறை பரிசுகள் பெற்றுள்ளார்.இது வரை புதினங்கள், புதினம் அல்லாதவை, கவிதைத் தொகுப்பு என ஏழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் குழு - எம்.கே .குமார்

சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர். ”மருதம்”, ”5.12PM”, ”ஓந்தி” ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வந்துள்ளன. ”சூரியன் ஒளிந்தணையும் பெண்” என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் இலக்கியப்பரிசு (மெரிட்)-2018 பெற்றவர். காலச்சுவடு வழங்கிய சிறுகதைக்கான “சுந்தர ராமசாமி விருது”, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ”கவிஞர் கண்ணதாசன் விருது”, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைகழகத்தின் ”அயலகத் தமிழ்ப்பங்களிப்பாளர்” ஆகியவற்றைப் பெற்றவர்.

தமீம் அன்சாரி

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியலும் ஆஸ்திரேலியாவிலுள்ள ‘மர்டாக்’ பல்கலைக்கழகத்தில் வநிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றாலும். பன்னாட்டு முன்னோடி கப்பல் நிறுவனத்தில் பொது மேலாளாராக பணி தமிழ் மொழி கற்றலிலும் சிங்கையில் தமிழ் வளர்ச்சியிலும் அதிக நாட்டம் பொது மேடைகளில் பேசுவதிலும், இலக்கியம் தொடர்பான நூல்களை வாசிப்பதிலும், கவிதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம். லிஷா இலக்கிய மன்றம், தமிழ் பேச்சாளர் மன்றங்கள், பேசும் கலை வளர்ப்போம், தாமான் ஜூரோங் தமிழ் மன்றம் செயல்பட்டாளர் ,2019 ஆம் ஆண்டின் சிங்கப்பூர் தேசிய கவிதை போட்டி வெற்றியாளர் , உலகத் திருக்குறள் மாநாட்டில், சிறந்த பங்களிப்பிற்காக “சாதனையாளர் விருது”.மேலும் லிஷா (Little India Shopkeepers & Heritage Association) அமைப்பின் சிறந்த தொண்டூழியருக்கான அங்கீகாரம் பெற்றவர்,பேச்சாளர் , ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பண்முகம் கொண்ட படைப்பாளி .

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்