சிங்கப்பூர் சென்ற மகன் கு.அழகிரிசாமி கு.அழகிரிசாமி கழுகுமலை பலசரக்குக்கடை சங்கரன் செட்டியார் வீட்டுக்குக் காவேரிப் பாட்டி வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணிக்கு மேலேயே இருக்கும். அப்போது வீட்டில் செட்டியார் இல்லை. அவருடைய மனைவியும் மகளும்தான் இருந்தார்கள். இருவருமே பாட்டியைப் பார்த்ததும் ஆவலோ வெறுப்போ இன்றி “வா பாட்டி, எங்கிருந்து வர்ரே?” என்று வரவேற்றார்கள். “ஊரிலே இருந்துதான் வர்ரேன் மீனாச்சி!” என்று கூறிவிட்டு, “முருகா…” என்று சொல்லிக்கொண்டே ஒரு மூலையில் உட்கார்ந்தாள் பாட்டி. உட்கார்ந்ததுமே “நாளைக்கு…