உலக புத்தக தினம் – சிறப்புக் கட்டுரை வாசிப்பு – சிவா இக்கட்டுரையில் வாசிப்பு என்று குறிப்பிடப்படுவது புத்துணர் வாசிப்பு (leisure reading). இது ஏதோ ஓய்வு நேரத்தில் மட்டும் போனால் போகட்டும் என்று வாசிப்பதல்ல. வாசிக்கும்போது சஞ்சரிக்கக் கிடைக்கும் வேறொரு உலகத்துக்காகவும், வாசித்துமுடிந்ததும் கிடைக்கும் மனவிரிவுக்காகவும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது உண்டாகும் நிறைவுக்காகவும் வாசிப்பது. ஆகவே, புத்துணர் வாசிப்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை ஆகியவற்றிற்காக வாசிப்பதைத்…