ஒரு செம்மொழி என்பது என்னைப் பொறுத்தவரை குறைந்தது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்; குறிப்பிடத்தகத் தொன்மை, தனித்தியங்கும் தன்மை, இலக்கியச் செழுமை. இம்மூன்றும் தமிழுக்கு இருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல வகைகளில் 40 நூல்களுக்கும் மேலாக இவரது படைப்புலகம் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் விரிகிறது. பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது. இடிதெய்வத்தின் பரிசு, ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள், ராபின்ஸன் க்ரூஸோ [அனைத்தும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, 2016] ஆகிய ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்களை முன்வைத்து, சிறாருக்கான மொழிபெயர்ப்பு, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகிவற்றில் மையம்கொள்ளும் உரையாடல் இது.
பாரதி (Subramania Bharati, 1882-1921) நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய நூலக வாரியமும், சிங்கப்பூர்த் தமிழ் பண்பாட்டு மையமும் இணைந்து, மகாகவி பாரதி மற்றும் அவரது காலத்தவரான சீனக்கவி
லூ ஷுன் (Lu Hsun, 1881-1936) இருவரின் சிந்தனைகளையும் குறித்து உரையாடும் ஓர் அரிதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சித்துராஜ் பொன்ராஜ், பேராசிரியர் ச்சுவா ஸு போங் (Chua Soo Pong) இருவரும் உரையாற்றிய இந்நிகழ்ச்சியில், பாரதி - லூ ஷுன் இருவரின் பங்களிப்புகளும் ஆய்வுசெய்யப்பட்டு அவர்களுக்குள் இருக்கும் பல ஒற்றுமைகள் வெளிப்படுத்தப்பட்டன. உரையாடலின் முடிவில், ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை சீனத்திற்கு மொழிபெயர்த்து பேராசிரியர் ச்சுவா உச்சஸ்தாயியில் பாடியபோது எழுந்த மனவெழுச்சி அலாதியானது.
பாரதியை சீனத்திற்குக் கொண்டுசெல்ல ஆவன செய்வதாகப் பேராசிரியர் சுவா தெரிவித்த செய்தி மகிழ்ச்சிக்குரியது. அம்முயற்சிக்கு நன்றி பாராட்டும் விதமாக சீனக்கவி லூ ஷுன் கவிதைத் தெறிப்புகள் இரண்டை இணைத்து மரபு, புது, நவீன வடிவங்களில் நான்கு கவிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி இங்கே.
சிங்கப்பூர் அதன் புவியியல், அரசியல், வியாபார மற்றும் பொருளியல் முக்கியத்துவத்தாலும், வரலாற்று ரீதியாகவும், காலனியாதிக்கத்தாலும் பல்வேறு மொழிகள் பேசும் மக்களின் வாழ்விடமாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய ஆய்வாளர் இயன் சிங்கிளேர் ‘சிங்கப்பூர் கல்’லில் இருந்த ‘கேசரிவ’ என்ற துண்டுச்சொல் 'பரகேசரிவர்மன்' என்ற ராஜேந்திர சோழனின் பெயர் என ஊகித்தது ஒரு பெரிய ஆச்சரிய அலையை உருவாக்கியதோடு, தமிழகத்திற்கும் சிங்கைக்குமான தொடர்பு குறைந்தது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்பதையும் வெளிப்படுத்தியது.
தமிழோடு சிங்கைக்கு ஒரு நீண்ட நெடிய தொடர்பு இருந்தாலும், உலகமும் மக்கள் நாகரிகமும் பல வழிகளிலும் முன்னேறி, பின்னர் ஆங்கிலம் முதன்மை ஆட்சி மொழியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதிலிருந்து இன்று வரை மொழிபெயர்ப்பு என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு உலக இணைப்பு மொழியாக அவசியத் தேவை காரணமாக ஆங்கிலத்தின் அசுர வளர்ச்சிக்கும் அதன் நெகிழ்வுத்தன்மைக்கும், தொழிநுட்ப வளர்ச்சியால் ஆங்கிலத்தின் சொற்களஞ்சியம் அதிவேகமாக நிறைய, அதற்குத் தகுந்த கலைச்சொற்களை உருவாக்குவதில் உள்ள சவால்களுக்கும் ஈடு கொடுப்பதில் சற்று பின்தங்கியே இருக்கிறோம். அது மட்டுமல்லாமல், மொழிபெயர்த்தல், எழுத்துரு மற்றும் ஒருங்குறியைக் கையாள்வதில் வேறுபாடுகள் இருப்பதும் ஒரு கூடுதல் சிரமமாக உள்ளது.
திரு. லீ குவான் இயூவும் திரு. ஜெயரத்தினமும் பல முறை கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இருவருமே வழக்கறிஞர்கள் என்பதால் அவர்களின் வாதங்களில் அனல் பறக்கும். வேகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும். அவர்களின் வாதத்தைப் பின்தொடர்ந்து மொழிபெயர்ப்பது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
அபிராமி சுரேஷ்: முழுக்க முழுக்க இன்ட்யூசனில் நாவல் அல்லது குறுநாவலை எழுதமுடியுமா?
ஜெமோ: இன்டியூசன் என நீங்கள் சொல்வதை இமேஜினேசனையா?
அபிராமி சுரேஷ்: அதுதான் எனக்குமே தெரியல. எழுத ஆரம்பித்தால் மேலிருந்து ஏதோ ஒன்று எழுதுவதைப்...
வெற்றி வாழ்வுக்கேமரணத்தைப் பற்றிய அச்சம் பொய்வெற்றி வாழ்வுக்கே.உயிர்களின் வேர்கள் நிறுவப்படுகின்றனநித்தமும் கொண்டாட்டம்இந்த ஆன்மா நிலையானதுவெற்றி வாழ்வுக்கே.இப்புவனம் புத்தம் புதிய வாழ்வே பெறுகிறதுமரணம் ஒரு மூடனைப் போல இருந்து விடுகிறதுஒற்றை விதையில் ஒரு நூறு...
உன் பார்வை என் இதயம் அல்லது ஆன்மாவின் மீது.
ஆனால் இந்தப் புகை போன்ற ஒன்று… அது எங்கிருந்து?
காலையின் முதற் கதிர் அந்தத் தீப்பந்திலிருந்து வரும்போது
எந்த கொள்ளை போன இதயத்தை அப்படி உற்றுப் பார்க்கிறாய்...
டான் டார்ன் ஹொவ்
ஆய்வாளர், கொள்கை கல்வி நிறுவனம்
நம்முடைய தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வாசிப்பு என்ற் கட்டாயப்பாடம் கொண்டுவரவேண்டும். அப்பாடத்திற்கு தேர்வும் இருக்கவேண்டும். இதைப்படித்ததும் உங்களுக்கு அனேகமாக் நான் மூளைகுழம்பியவன் என்று தோன்றலாம். ஆனால் அது...