கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல வகைகளில் 40 நூல்களுக்கும் மேலாக இவரது படைப்புலகம் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் விரிகிறது. பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது. இடிதெய்வத்தின் பரிசு, ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள், ராபின்ஸன் க்ரூஸோ [அனைத்தும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, 2016] ஆகிய ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்களை முன்வைத்து, சிறாருக்கான மொழிபெயர்ப்பு, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகிவற்றில் மையம்கொள்ளும் உரையாடல் இது.