சோ சூ காங் நீர் சுத்திகரிப்பு நிலையம் சுமார் 28 மில்லியன் வெள்ளி செலவில் மேம்படுத்தபடவுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கி 2026ல் முடிவடையும் இந்தத் திட்டத்தில் சில கட்டமைப்பு மேம்பாடுகளுடன், குறைந்த பராமரிப்பு தேவைப்படும் பீங்கான் (ceramic) சவ்வுகள், ஒசோன் உயிரி கிளர்வுற்ற வடிகட்டிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களும் பயனுக்கு வரவுள்ளன. மேலும் கரிமச் சுவடுகளைக் குறைக்கு நோக்கில் சூரிய மின்சக்தி உற்பத்தியும் தற்போதுள்ள 1 மெகாவாட்டிலிருந்து அதிகரிக்கப்படும். இந்த நிலையம் தற்போது சுமார் 80 மில்லியன் காலன் நீரை சுத்திகரிக்கிறது.