ஆர்ட்ஸ் ஹவுஸ் மற்றும்
தேசிய கலைகள் மன்றம் இணைந்து ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் தங்க முனை படைப்பிலக்கியப் போட்டியின் 2021ம் ஆண்டின் வெற்றியாளர்கள் பட்டியல்
‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இசங்கள் என்பதும் பெயர்களைப் போலத்தான். இசம் என்பது ஒரு தனிப்பட்ட நபரால் அல்லது குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, செல்வாக்குப் பெற்று, கலைகளுடன் கலக்கப்பட்டுவிட்டபின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.
அரசியலில் இருக்கக்கூடாது என்பது ஒரு போலித்தனம்; ஏமாற்று வேலை. அரசியலில் இல்லாமல் எப்படி எழுத்து வரும்? அரசியல் என்பது என்ன? அது உங்கள் உலகப் பார்வையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு அரசியலுக்கும் பின்னர் ஓர் ஐடியாலஜி இருக்கிறது. மார்க்சியம், திராவிடம், காந்தியம், இறையியல், இந்து மதம், இஸ்லாம், சூஃபியிஸம், கிறிஸ்டியானிடி என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின்னர் ஓர் உலகப் பார்வை இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவம் மனிதர்களையும், மனிதர்களுடைய உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு வழிகாட்டுகிறது. வழிமுறைகளைச் சொல்கிறது. ஒரு வழிமுறையைக் கொடுக்கிறது.
பெரியார் உலகைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு ஒரு வழிமுறையைக் கொடுக்கிறார். சூஃபியிசம் இன்னொரு விதமான வழிமுறையைக் கொடுக்கிறது. நான் சூஃபியிஸம் சார்ந்த ஓர் ஆளாக இருந்தால் அதன் வழியாக என் கவிதைகள் உருவாகும். நான் ஒரு பெரியாரிஸ்டாக இருந்தேனென்றால் சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்கள், சிக்கல்கள், சமூக ஏற்றத் தாழ்வுகள் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு பெரியார் வேண்டும். அம்பேத்காரிஸ்டாக இருந்தால் அது எனக்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். எனவே அரசியலும், தத்துவமும் ஒரு படைப்பள்ளிக்கு இருந்தே ஆக வேண்டியன. எழுதப் படிக்கத் தெரிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசியலும் தத்துவமும் தெரிந்திருப்பது; அவற்றைச் சார்ந்திருப்பது.
சிறுகதையின் லட்சணங்களைப் பற்றிய ஒரு சொற்பொழிவு அன்று நடைபெற்றது. அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் ஓ ஹென்றியின் கதையொன்று வாசிக்கப்பட்டு எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. மற்றொரு மாதம் சிதம்பரம் சுப்ரமணியம் எழுதிய ஒரு சிறந்த கதையைப் பற்றிய விமர்சனம் நடந்தது. நல்ல சிறுகதைக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள், இருக்கக் கூடாத விஷயங்கள் எவை எவை என்பதை ஒவ்வொருவரும் தாமாக உணரத் தொடங்கினார்கள்.
பிறகு, மலாயா எழுத்தாளர்களின் கதைகளையே விமர்சிப்பது என்று தீர்மானித்தோம். மறுபடியும் கூட்டத்துக்கு வருவதற்குமுன் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு சிறுகதையை எழுதியனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அவ்வண்ணமே பல கதைகள் வந்தன. அவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தில் வாசித்தோம். வந்திருந்த முப்பது எழுத்தாளர்களும் விமர்சனத்திலும் விவாதத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வாக்கியமுமே அலசி ஆராயப்பட்டது. வேண்டாத வளர்த்தல்கள், மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டங்கள், பாத்திர சிருஷ்டியின் குறை நிறைகள், அர்த்தமற்ற அடுக்குச் சொற்கள், விஷயத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் பாஷை நடை, எழுத்துப் பிழைகள் முதலிய எத்தனையோ விஷயங்களை ஒவ்வொருவரும் தெள்ளத் தெளிவாகக் கண்டு கொள்ளத் தொடங்கினார்கள்.
1952-ல் நான் மலாயாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். ’தமிழ் நேசன்’ பத்திரிகையில் ஞாயிறு பதிப்பைத் தயாரிக்கும் முழுப் பொறுப்பும் என்னுடையதாயிற்று. ’`இந்நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள்’ என்று நூறு நூற்றைம்பது கதைகளைக் கொண்ட ஒரு கட்டு என்னிடம் கொடுக்கப்பட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. இந்நாட்டில் கதை எழுதக் கூடியவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
நான் மலாயாவில் போய் இறங்கிய போது. அங்கே கதை எழுதுகிறவர் என்று ஒருவர் இருப்பார் என்றே நான் நினைக்கவில்லை.
மலாயா, சிங்கப்பூர்த் தமிழ்த் தினசரியில் இந்த அளவுக்குப் பிரபலமான, திறமையான தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் பணியாற்ற வந்து சேர்ந்தது இதுவே முதன்முறை. இதுவே கடைசிமுறையும் கூட.
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல வகைகளில் 40 நூல்களுக்கும் மேலாக இவரது படைப்புலகம் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் விரிகிறது. பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது. இடிதெய்வத்தின் பரிசு, ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள், ராபின்ஸன் க்ரூஸோ [அனைத்தும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, 2016] ஆகிய ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்களை முன்வைத்து, சிறாருக்கான மொழிபெயர்ப்பு, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகிவற்றில் மையம்கொள்ளும் உரையாடல் இது.
12-ஆம் நூற்றாண்டு நூல்களிலிருந்து, இன்றைய ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணனிலிருந்து, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படைப்புகள்வரை வாசிப்பதாலேயே விரல் துனியில், பம்மாத்து இலக்கியம் எது, தரமான இலக்கியம் எது, இலக்கிய காடேற்றிகள் யார் என்பதை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கணிக்க முடிகிறது. இன்றும் என்னுடைய எழுத்தில், அது சிறுகதையாகட்டும், நாடகமாகட்டும் அன்றாட வாழ்வியலில் நமது சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, பெண்களின் பிரச்னைகளை அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைத்தான் அதிகமாக எழுதுகிறேன். எனக்கென்று உள்ள வாசகர்கள்கூட அந்தக் கதைகளால்தான் கவரப்பட்டு என்னை வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கான அழைப்புகளைப் பொதுவாகவே ஜே.கே. தவிர்த்துவிடுவார் என்பதை எஸ்.பொ. நன்கு அறிந்திருந்தார். அதனால் “எப்படியாவது ஜே.கே.யிடம் சம்மதம் பெற்றுத் தாடாப்பா...” என உரிமையுடன் எனக்குக் கட்டளையிட்டுவிட்டார். எதையாவது கேட்டு ஒருமுறை மறுத்தாரென்றால் ஜே.கே.யிடம் மீண்டும் அதேவிடயத்தை யாரும் கேட்க முடியாது. கடுப்பாகிவிடுவார். பின்பு எந்தக் கொம்பன் கேட்டாலும் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.
இதெல்லாம் தெரிந்து வைத்திருந்த நான், ஜே.கே.யின் குரல் குதூகலமாயிருந்த ஒரு கணத்தில் எஸ்.பொ.வின் வேண்டுகோளைத் தயங்கித் தயங்கி அவிழ்த்துவிட்டேன். “அப்டியா? எஸ்.பொ. கேட்டால் மறுப்பேது… சரின்னு சொல்லுங்க. நம்ம மலேசிய எழுத்தாளர்களின் புஸ்தகம்னு வேறு சொல்லுறீங்க… ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க… இன்ஷா அல்லாஹ்… நான் வருகிறேன்.” என்றவர், “நீங்களும் வந்துடுவீங்கதானே…” என்றார். “நான் வராமலா… நிச்சயம் வருகிறேன் ஐயா…” என்று சொல்லியும் விட்டேன். எஸ்.பொ. நிம்மதியானார். இதுதான் அந்த முன்கதை.
பாரதி தன் 38ஆவது வயதில் மறைந்து (11.12.1882 - 11.09.1921) ஒரு நூற்றாண்டு ஓடிவிட்டது. இந்த நான்கு தலைமுறைக் காலத்தில் சாதரணமாகப் புலவர் என்று தொடங்கி கவி, புரட்சிக்கவி, தேசியக்கவி, மகாகவி என்று பாரதியின் இடம் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. வள்ளுவர் ‘தெய்வப்’புலவர் ஆகியதுபோல பாரதியும் விரைவில் ‘தெய்வக்’கவி ஆகவும் கூடும்.
பாரதியைக் கடவுளாக அல்லாமல் ஓர் ஆசிரியர் நிலையில் வைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் ஓர் ஆசிரியரிடம் நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அதேநேரத்தில் அவரிடம் கேள்விகளைக் கேட்கிறோம், உரையாடுகிறோம். திருக்குறள் ஒரே பிரதிதான். ஆனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் அதற்கு வெவ்வேறு உரைகளை எழுதியிருக்கின்றனர். அவ்வகையில் கடந்த ஈராயிரமாண்டுகளாக நாம் வள்ளுவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறோம். ஆகவேதான் திருக்குறள் இன்றும் புதிதாக இருக்கிறது. அப்படியான உரையாடும் இடத்தில்தான் நாம் பாரதியையும் வைக்க வேண்டும்.
அனுபவம். அதுவும் நமக்கு வேண்டும். அதேவேளையில், பாரதி மறைந்து நூற்றாண்டு கடந்திருந்தாலும் அவன் இன்றும் பொருத்தமான கவிஞனாக, சிந்தனையாளனாக நீடிக்கிறானா என்று அணுகி உரையாடியும் பார்க்க வேண்டும். அவ்வாறு அவனுடன் உரையாடியபோது புலப்பட்ட சில பார்வைகளை இக்கட்டுரையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
அதிவேக ரயில் பிடிக்க
ஈசலென மோதிப் போகிறீர்கள்
'வருத்தங்களும் மன்னியுங்களும்'
புறத்தே உருக்கொண்டு புறத்திலே
மரித்துவிழ!
மின்தூக்கியில் அருகாண்மை
துருத்தி வெளித்தள்ள முயலும் அமைதி
பயத்தின் விரல்கள் பதறிட
நாற்புறமும் சுவரைச் சுரண்டும் விழிகள்.
உணவு விடுதியில்
எதிர் ஆளாய் அமர நேரிட்டால்
மலரக் கூசி
கையடக்கத் தொலைபேசியில்
கதைக்கத் துவங்குகிறீர்கள்…
கரிசனத்தை இழந்து
வாழ்வில் அர்த்தமுள்ளதாய்
எதையெல்லாம் பெறுவீர்கள்
புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும்
என்னை என்ன செய்ய
உத்தேசிக்கிறீர்கள்...
தமிழகத்து எழுத்துலகம் எனும் கிணற்றில், சுமார் நாற்பது ஆண்டுகளாக ஜீவித்துக்கொண்டு வருமாறு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தவளை நான்.
இந்த கிணற்றுத் தவளை அவ்வப்போது கொஞ்சம் கிழக்கேயும் மேற்கேயும் போய்வருவது உண்டென்றாலும், இந்த முறை 2014க்கான...
ஒரு கவிதையை வாசிப்பது, ஒரு கதையையோ கட்டுரையையோ வாசிப்பது போல சௌகரியமாகச் செய்யக்கூடிய வேலை அல்ல. அதற்கென்று ஒரு கூடுதல் சிரத்தை தேவையாக இருக்கிறது. ஒரு முழுநீள நாவல் தரும் நிறைவை ஒரு நல்ல கவிதையால் கொடுக்க முடியும் என்று நண்பர் ஒருவர் கூறுவார். அப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் நாவலுக்குச் செலவிடும் நேரத்தில் சிறிது அளித்தாலே அந்த உணர்வைப் பெற முடியுமாயின், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் எங்கள் அனைவருக்கும் வெண்பா கிறுக்குத்தான். உலகநாதன் ஒருமுறை வெண்பா போட்டியை அறிவிக்கிறார். திருக்குறளில் உள்ள காமத்துப்பாலில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, உங்கள் வார்த்தையில் வெண்பா எழுத வேண்டும் என்பதுதான் போட்டி
சிங்கப்பூர் இலக்கிய மாநாடு அதன் மூன்றாவது பதிப்பிற்கு திரும்பியுள்ளது!கவிதை, புனைகதை மற்றும் நாடகம் ஆகியவற்றில் 'சமூகம்' என்ற மாநாட்டின் கருப்பொருளை ஆராயலாம் வாருங்கள்.
தி சிராங்கூன் டைம்ஸ் ஜூன் 2021 இதழில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரைகள்பற்றிய சிறு அறிமுகம் இங்கே...
இக்கட்டுரைகள் உட்பட 'தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் இணைய இதழாகப் படிக்க இங்கே சுட்டுங்கள்.
கரிசல் மண்ணின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டிருக்கும் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சோ.தர்மராஜ் எனும் சோ.தர்மன் எழுதிய சூல் நாவலுக்கு 2019ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டபோது இந்த நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் துரத்திக்கொண்டேயிருந்தது. சமீபத்தில்தான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. வாசிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும்வரை இளவயதில் பார்த்துப் பார்த்து வளர்ந்த கிராமத்தின் இயற்கை வளமும் காட்சிகளும் கண் முன்னே வந்து வந்து சென்றன.
- சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் வாசிப்பு - இன்பாவின் சிறப்புக் கட்டுரையை முழுமையாகப் படிக்க 'தி சிராங்கூன் டைம்ஸ்' இதழுக்கு சந்தா செலுத்துங்கள்.
நகர்மயமான, பரபரப்பான, பொருளீட்டும் நவீன வாழ்க்கை, தொழில்நுட்பத்தின் ஊடுருவல் ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கவியலாமல் புழக்கத்தில் சரிந்து அடையாளமாக மட்டுமே நீடிக்கும் தமிழ்மொழி, பாரம்பரியக் கலைவடிவங்கள் எனப் பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சிக்கான சவால்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் அதிகரித்துவருகின்றன.
ஷாநவாஸின் சிறப்புக் கட்டுரையை முழுமையாகப் படிக்க இன்றே சந்தா செலுத்துங்கள்.
https://serangoontimes.com/subscribe/
அந்த நிகழ்வின் பின்னர் அவர் எனக்கு ஒரு உடன்பிறவா சகோதரன்போல ஆகிக்கொண்டார். இந்த அன்பு எப்படி ஏற்பட்டது என்று இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எல்லா கதைகளிலும் இயற்கை செழித்து வளர்ந்து சிரிக்கிறது. ஒரு மிகச்சிறந்த தொகுப்பாக மலர்ந்திருக்கிற இந்தத் தொகுப்பு அழகியல் கிளர்த்தும் அருமையான கதை மலர்கள்.
ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டான் என்று முதன்முறை கேள்விப்படும் ஒருவருக்கு அவன் வாழ்வதற்கு ஒரேயொரு வழிகூட இல்லையா என்ற ஒரு துயர ஆயாசம் எழக்கூடும். ஆனால்...
சிங்கப்பூர் எனும் ஒரு ஹைடெக் தீவில் , கான்கிரீட் வனந்தாரத்தில் இயற்கையையும், மனிதத்தன்மையையும் தேடி அலையும் சித்ரா ரமேஷின் குரல் தற்காலத் தன்மையுடைய ஒரு கவிதைக் குரல். இக்குரல் மென்மேலும் பட்டைத் தீட்டப்படுவதின் மூலம் கவிதையின் புதிய எல்லைகளைத் தேடிக்கண்டு பிடிக்கும் திராணியுள்ளது. இக்கவிதைகள் ஒரு ஹைடெக் நகரத்துச் சுவரில் தீட்டப்பட்டசுவரோவியங்கள் என்றே சொல்லுவேன்.
'ஆறஞ்சு' சிறுகதைத் தொகுப்பு
அழகுநிலா
வாசிப்பு: ஷா நவாஸ்
சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உலகில் இன்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு என்ற பெயரோடு. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் அழகுநிலாவின் உரைநடை, இசைவான எளிமையான, வாசிப்பவரை சுலபத்தில் ஈர்க்கக் கூடியவற்றை, அவ்வளவாக அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அர்த்தத்தைத் தரும் விதத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆறஞ்சு கதை சுய அனுபவமாகவோ,...
உலக புத்தக தினம் - சிறப்புக் கட்டுரை
அயல்பசியும் உறுபசியும்
அ.ராமசாமி
ஷா நவாஸைச் சிங்கப்பூரில் பார்ப்பேன் என்பது தெரியும். ஆனால், அவரது உணவுத்தோட்டத்திற்குப் போவேன்; அவரே சமைத்த கறிவகைகளை ஒரு வெட்டு வெட்டுவேன் என்றுநினைக்கவில்லை. கடலூரான் ஹாஜா மொய்தீன், ஜெயந்தி சங்கர் தொடர்பு வழியாகத் தொலைபேசியில் ஷாநவாஸ் பேசியபோது மதுரையில் ஒரு உணவுவிடுதியில் முட்டைப்பரோட்டாவும் செட்டிநாடு சிக்கனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அயல்நாட்டுத்...
உலக புத்தக தினம் - சிறப்புக் கட்டுரை
மகிழ்ச்சியான பன்றிக் குட்டி
வெய்யில்
வாசிப்பு: பாரதி மூர்த்தியப்பன்
கவிதை நூலை ஆல் இண்டியா மினிமார்ட்டில் முதலில் பார்த்தபோது அதன் அட்டைப்படமே நின்று கவனிக்க வைத்தது. அட்டையின் மேல் ஓரத்தில் சடைகள் விரித்த புத்தர் உருவம் சட்டென்று கவிதைக்கான பித்து நிலைக்கு கொண்டு சென்றது....
உலக புத்தக தினம் - சிறப்புக் கட்டுரை
வாசிப்பு - சிவா
இக்கட்டுரையில் வாசிப்பு என்று குறிப்பிடப்படுவது புத்துணர் வாசிப்பு (leisure reading). இது ஏதோ ஓய்வு நேரத்தில் மட்டும் போனால் போகட்டும் என்று வாசிப்பதல்ல....
சிங்கப்பூர் சென்ற மகன்
கு.அழகிரிசாமி
கழுகுமலை பலசரக்குக்கடை சங்கரன் செட்டியார் வீட்டுக்குக் காவேரிப் பாட்டி வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணிக்கு மேலேயே இருக்கும். அப்போது வீட்டில் செட்டியார் இல்லை. அவருடைய மனைவியும் மகளும்தான்...
உலக புத்தக தினம் - சிறப்புக் கட்டுரை
வாசிப்பு - ஷா நவாஸ்
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பக்கத்துவீட்டு பெரியம்மாவுக்கு கடிதம் எழுதிக்கொடுக்கும் போதெல்லாம் அவர்கள் கையில் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்துக்கொண்டு ‘இவந்தான்...
சிங்கப்பூர் சாங்கிக்கு அடுத்தபடியாக மரத்தின் பெயர் கொண்ட இடம் செம்பவாங்...
சிங்கப்பூர் கடற்படை அருங்காட்சியகம், செம்பவாங் கடற்கரை, செம்பவாங் பயணிகள் கப்பல் தளம், இரண்டாம் உலகப்போர் நினைவிடங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் உள்ள...
சிங்கப்பூர்
கரிகாற்சோழன் விருது
2019 - 2020 கொரொனா பேரிடரால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் படைப்பாளர்கள் 2019 - 2020 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தங்களின் நூல்களில் 4 பிரதிகளை தபால் மூலமாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனுப்பவேண்டிய முகவரி:
The Serangoon...
சிங்கை- ஜுஹர் பிரயாணக் கும்மி என்ற இந்த கும்மிப் பாடல் அடியக்கமங்கலம் செய்குமுகமது பாவலர் அவர்களால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. சிங்கை, மலேசியாவின் அழகையும் செழிப்பையும் கும்மி வடிவில் சொல்லும் பாடலை விளக்கும்...
சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் அடியக்கமங்கலம் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப் பார்த்து வியப்பது போல கும்மி...
https://www.youtube.com/watch?v=w4jK-tdXSMk
சென்னை புத்தகத் திருவிழாவில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழ் மார்ச் 7 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் `தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழை கவிஞர் இந்திரன் வெளியிட...
https://www.youtube.com/watch?v=w4jK-tdXSMk
சென்னை புத்தகத் திருவிழாவில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழ் மார்ச் 7 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் `தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழை கவிஞர் இந்திரன் வெளியிட...
சுகமும் துக்கமும்
நிரந்தர சோகம் எனக்கு வேண்டாம்
சுகமும் துக்கமும் சேர்ந்த விளையாட்டே
இந்த வாழ்வைத் திறக்கிறது.
சுகமும் துக்கமும் எழிலாய் இணைந்த
இந்த வாழ்வே பூரணம் பெறுகிறது.
நிலவை மேகங்கள் சூழ்ந்து மறைப்பதும்
நிலவினின்று மேகங்கள் மறைவதுமாக
வாழ்வு பூரணம் பெறுகிறது.
உலகம் துக்கங்களால்...
சோப்பின் நுரை கொண்டு இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவிட்டு நிமிர்ந்தாள் நிர்மலா. கண்ணாடியில் இடுப்பு வரையிலான அவள் உருவம் தெரிந்தது. சிறு ஊஞ்சல் போல் முகக் கவசம் அவளின் இரு காதுகளிலும்...
சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் ஆதரவுடன் நடத்தப்பட்ட ‘சிலம்பில் பதினோராடல்கள்’ எனும் digital presentation 'சக்தி நுண்கலைக் கூட'த்தின் ஒருபுதுமையானமுயற்சி. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலிருந்து இசைநயம் வாய்ந்த பல பகுதிகளும், நாடகத்தின் நல்லியலையும், தமிழருடைய நாட்டிய வரலாற்றையும் அறிய முடியும். சிலப்பதிகார நூலில் பதினோரு ஆடல்கள் பற்றிய...
திம்புசு மரம்
ஏன் இதன் பூக்களுக்கு மட்டும் இப்படி ஒரு மயக்கும் மணம்? அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டும்? கலைவேணிக்கும் இதே கேள்விகள் உண்டு. நாங்கள் முதல் முறை சந்தித்ததும் இந்தக் கேள்வியால்தானே. கைகோத்தபடியே...
எழுத ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாக இருக்கிறது. நான் பல உரைநடை, சிறுகதை, நாவல் எழுதும் பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ நான் முதலில்...
சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப்பார்த்து வியப்பது போல கும்மி வடிவில் இந்த...
அபிராமி சுரேஷ்: முழுக்க முழுக்க இன்ட்யூசனில் நாவல் அல்லது குறுநாவலை எழுதமுடியுமா?
ஜெமோ: இன்டியூசன் என நீங்கள் சொல்வதை இமேஜினேசனையா?
அபிராமி சுரேஷ்: அதுதான் எனக்குமே தெரியல. எழுத ஆரம்பித்தால் மேலிருந்து ஏதோ ஒன்று எழுதுவதைப்...
சிங்கைக்கும் ஜுஹருக்கும் இடையேயான பெரும் தாம்போதி 1919ம் ஆண்டுதொடங்கி 1924ம் ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது. அப்படி என்றால் அதற்கு முன் வாழ்ந்த மக்கள் ஜுஹருக்கும் சிங்கைக்குமிடையே எப்படி சென்று வந்தார்கள், வழியில் என்னென்ன...
எனக்கு இந்நகரம் அந்நியப்பட்டு நிற்கிறது
என் நினைவுகளில் அகல முடியாதவிலங்குகள் பல திரியும் காட்டில்இல்லாத சிங்கமொன்று உலவிக் கொண்டு அந்தக்கனவொன்றில் இந்நகரம் உறங்குகிறது.
சேறு படிந்த மழை ஈரப்பிசுபிசுப்பில்நிலத்தைத் தோண்டினால்என் கம்பத்து வீட்டின் கூரைகள்கிடைக்கக்கூடும்.
சேவல்களின் முனகல்கள்கூரைக்கு...
சிங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வியல் குறித்த எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. முதன்முதலில் படகில் பயணம் செய்து சிங்கையை அடைந்த தமிழ் பயணிகளின் வாழ்க்கையை கண்முன் காட்சிகளாக விரிக்கிறது 1893ம் ஆண்டு வெளியான ‘அதிவினோத...
மொழிபெயர்ப்பு: முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன்
ஆர்தரின் நீத்தல்
Morte D’ Arthur by Alfred Lord Tennyson—An Introduction to the background
ஐரோப்பிய வரலாற்றின் இடைக்காலம் என்று அறியப்படும் காலம் 5 முதல் 15 ஆம்...
காத்திருந்து, கீழமர்ந்து கல்வியையும் கலையையும் கற்ற காலங்கள் இன்று குறைவு. காத்திருக்கவும் நேரமில்லை, கீழமரவும் காலமில்லை. கால்கள் நடந்து கொண்டே இருக்க கையடக்கக் கைபேசியின் வழி கைக்குள் அடக்கமாகிறது அனைத்துலகமும். இன்றைய வாழ்வின் வேகத்திற்கு...
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும்
மாயக்கண்ணாடி நீ,
உன் பாதச்சுவடுகளை பின்தொடர்வது
ஒரு மர்ம தேசத்திற்கு வழிதேடி
வெகுதூரத்திலிருந்து உன்னைக் கண்டாலும்
உன் நிஜத்தைவிட மிக உயரமாகவே நீ தெரிகிறாய்
மனக்கண்ணில் உன்னை சித்திரம் தீட்ட...
சிறுவர் நூல் அறிமுகம் - திரு. இராம.கண்ணபிரான்
‘வீணாவும் தொலைந்த பதக்கமும்’ என்ற நூலின் தலைப்பே ஒரு புதிரை ஏற்படுத்தி, வீணா தொலைந்த பொருளைக் கண்டுபிடிப்பாளா என்ற எதிர்பார்ப்பு நிலையை பாலிய வாசகர்களிடம் கிளறிவிடுகிறது.
அறுபத்தேழு...
இவள்
மணிமாலா மதியழகன்
மணிமாலா மதியழகன் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. சிங்கப்பூர் நாட்டில் வாழும் எழுத்தாளர். அந்நாட்டுப் பின்னணியிலும் கலாசார அம்சங்களிலும் அக்கறை கொண்டு எழுதியிருக்கும் கதைகள் இவை. தமிழ்நாட்டுச் சூழலில் சிங்கப்பூர் சூழலிலும்...
மாலினி, கணினியில் லோட் ஆகும் பைல் சுற்றுவதுபோல் சுற்றிக்கொண்டிருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் கால்களால் மெல்லத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். மெதுவாக நடந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள்....
அருள்நிதி ச.ஞானசம்பந்தன் பி.எஸ்சி.எம்.ஏ, அவர்களின் இரண்டாவது நூலே, ‘திருமந்திரத்தில் வழிபாட்டு நெறிகள்’ என்னும் ஆய்வுப் பனுவலாகும். இந்நூலையும், இவரது முதல்நூலான ‘சித்தர்களின் நெறியில் வேதாத்திரிய யோகம் – ஓர் ஒப்பாய்வு’ என்ற நூலையும்...
உன் பார்வை என் இதயம் அல்லது ஆன்மாவின் மீது.
ஆனால் இந்தப் புகை போன்ற ஒன்று… அது எங்கிருந்து?
காலையின் முதற் கதிர் அந்தத் தீப்பந்திலிருந்து வரும்போது
எந்த கொள்ளை போன இதயத்தை அப்படி உற்றுப் பார்க்கிறாய்...
உன் தாத்தாவிற்கும் என் தாத்தாவிற்கும் ஒரே ஊர்தான்உன் வீடும் என் வீடும் ஒரே வட்டாரம்தான்உனக்கும் எனக்கும் ஒரே நாடாளுமன்ற குழுத்தொகுதிதான்உனக்கும் எனக்கும் ஒரே ஸோன்தான்உன் இனமும் என் இனமும் ஒரே இனம்தான்உன் அடையாள...
ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் புத்தகமாக வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக்காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் கடலுக்கு அப்பால் மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது என்பதை அவதானிக்கமுடிகிறது. இக்கட்டங்களை...
தமிழ்மொழி மாத நிறைவு விழாவாக கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் திரு தமிழருவி மணியன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் சில முக்கியமான கருத்துக்கள்.
பொதுவாகவே சங்க இலக்கியங்கள் குறித்த சிந்தனை குறைந்து கொண்டே...
அறக்கப் பறக்க ஓடி, எட்டு மணி பேருந்து பிடித்து, தம்பெனிஸ்
ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு இரயிலேறி கதவோரம்
காலியாக இருந்த இருக்கையில் வேறு யாரும் அமரும் முன்
வேகமாகச் சென்று அமரும்போது காலை மணி 8.15.
முக்கால்...
பதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மெல்பகுலாஸோ. ஆசிரியர் மாதங்கி. திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட இவர் 1993ல் இருந்து சிங்கப்பூரில் வசிப்பவர். நூல் வெளியான ஆண்டு 2014. இந்த ஆண்டு (2016) சிங்கப்பூர் இலக்கியப்பரிசுக்கான போட்டியில்,...
மு. கோபி சரபோஜிகையில் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். தன்னாலும் தமிழிலக்கியத்துக்கு ஒரு கவிதைநூலைத் தந்து விட முடியும் என்ற நம்பிக்கையின் வீக்கம் சீழ் பிடித்து கவிதைச் சந்தையில்இருந்து வாசகனை ஓட வைத்து...