சிறுவர் நூல் அறிமுகம் – திரு. இராம.கண்ணபிரான் ‘வீணாவும் தொலைந்த பதக்கமும்’ என்ற நூலின் தலைப்பே ஒரு புதிரை ஏற்படுத்தி, வீணா தொலைந்த பொருளைக் கண்டுபிடிப்பாளா என்ற எதிர்பார்ப்பு நிலையை பாலிய வாசகர்களிடம் கிளறிவிடுகிறது. அறுபத்தேழு பக்கங்கள் உடைய இச்சிறுநாவல் ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ‘அதிகாலைச் செய்தி’, ‘திடுக்கிடவைத்த ரகசியம்’, ‘ஆசிரியர் எங்கே?’ என்ற பரபரப்பு இயல்களை அமைத்து, ‘இணைந்த கைகள்’, ‘வித்யாவின் உதவி’ என்ற பிரிவுகளால் உணர்ச்சி நிலைகளைச் சமன்படுத்தி, ‘வென்றது வாய்மை’ என்ற…