கடந்த மாத (செப்டம்பர் 2022) இதழில் 'முன்னணியில் நின்றும் முகமிழந்த சிப்பாய்கள்' என்ற தலைப்பில் இராணுவ வரலாற்றாசிரியர் நெடுமாறன் நமசிவாயம் அவர்களின் நேர்காணல் வெளியானது.
பிரதமர் லீ குவான் இயூவின் 80வது பிறந்த நாள் நிகழ்ச்சி ஷாங் ரீலா ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றபோது, சிங்கப்பூர்த் தேசிய கலைமன்றத்தின் ஓர் இலக்கிய விருந்தினனாக, அங்குச் சென்று, அவருடன் கைகுலுக்கிச் சில வார்த்தைகள் பேசினேன். ’ரைட்டர்’ என்றேன். ’ரைட்டர்?’ என்று மேலும் கீழும் இழுத்தார். எனக்கு உதறிவிட்டது.
கவிதை எழுதும் பல நேரங்களில் நம்முடைய வாழ்கையில் நடந்தது, நடக்காதது, நடக்க வேண்டும் என்று எண்ணியது பற்றி எழுதுகிறோம். அல்லது மற்றவர்களின் உணர்வுகளை நம்முடையதாகக் கொண்டு கவிதையில் படைக்கிறோம். ஏதாவது சர்ச்சைக்குரிய கருப்பொருளை எழுதப் பொதுவாகத் தமிழில் பெண்களுக்கு ஒரு தயக்கம் உள்ளது. எது எழுதினாலும் அது அவர்களைப் பிரதிபலிக்கிறது என்ற ஒரு எண்ணம் இங்கு பலருக்கும் உண்டு. ஆனால் அது ஆண்களை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. மேலும் நேர பற்றாக்குறையும் உள்ளது.
இந்த இடத்தில், ஒரு எழுத்தாளனின் பங்கு என்ன என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அடிப்படை மனிதநேயம், சக மனிதர்களும் நமக்குமான உறவை மேம்படுத்துவது, பல்வேறு பிரிவுகள் கொண்ட மனிதர்களை ஒன்றாகப் பார்ப்பது. இவையெல்லாம் தான் ஒரு எழுத்தாளரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள் இப்படி தான் இருந்தார்கள்
எந்தவொரு நாகரிகத்திற்கும் முழுமையாகவோ பகுதியாகவோ அதன் தொடர்ச்சி அறுபடுவதற்கான வாய்ப்புண்டு. ஒரு நாடும் அதன் அடையாளமும் நீடித்தாலும், அதன் அரசியல் என்றென்றும் நீடிக்காது. இது வரலாற்றின் விதி. ஆயினும்கூட, தக்க சமயத்தில், சமுதாயப் பிரச்சனைகளை நாம் கண்டறிந்து சரிசெய்ய முயற்சித்தால் பேரழிவைத் தடுக்க முடியும்.
நமது பலமாகக் கருதப்படும் பன்முகத்தன்மை பலவீனமாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. அடையாள நெருக்கடி, சமூக ஒத்திசைவில் சரிவு, இன, மத மற்றும் மொழி அடிப்படையிலான வெறுப்பு போன்றவை எந்தவொரு நாட்டின் திடநிலையையும் பாதிக்கக்கூடும். ஆகவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டே முன்னகர்வதுதான் வரலாறு மீண்டும் நிகழாமலிருக்க ஒரேவழி.
அபிராமி சுரேஷ்: முழுக்க முழுக்க இன்ட்யூசனில் நாவல் அல்லது குறுநாவலை எழுதமுடியுமா?
ஜெமோ: இன்டியூசன் என நீங்கள் சொல்வதை இமேஜினேசனையா?
அபிராமி சுரேஷ்: அதுதான் எனக்குமே தெரியல. எழுத ஆரம்பித்தால் மேலிருந்து ஏதோ ஒன்று எழுதுவதைப்...
அனூஜ் ஜெயின்.
சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான தன் ஐந்து வருட முனைவர் பட்ட ஆய்வை 2016ன் ஆரம்பத்தில் தேசியப் பல்கலைல் கழகத்தில் முடித்திருப்பவர். காடுகள், வன உயிரினங்கள்...
சீடார் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலைக் கல்வி, இராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிமற்றும் இராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி படிப்புகளுக்குப் பிறகு சிங்கப்பூர்த் தேசியப்பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையிலும் தெற்காசிய கல்வித் துறையிலும் பட்டம்பெற்றவர். தற்போது ஸ்பிரிங் சிங்கப்பூர்...