கவிதை எழுதும் பல நேரங்களில் நம்முடைய வாழ்கையில் நடந்தது, நடக்காதது, நடக்க வேண்டும் என்று எண்ணியது பற்றி எழுதுகிறோம். அல்லது மற்றவர்களின் உணர்வுகளை நம்முடையதாகக் கொண்டு கவிதையில் படைக்கிறோம். ஏதாவது சர்ச்சைக்குரிய கருப்பொருளை எழுதப் பொதுவாகத் தமிழில் பெண்களுக்கு ஒரு தயக்கம் உள்ளது. எது எழுதினாலும் அது அவர்களைப் பிரதிபலிக்கிறது என்ற ஒரு எண்ணம் இங்கு பலருக்கும் உண்டு. ஆனால் அது ஆண்களை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. மேலும் நேர பற்றாக்குறையும் உள்ளது.