இந்த இடத்தில், ஒரு எழுத்தாளனின் பங்கு என்ன என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அடிப்படை மனிதநேயம், சக மனிதர்களும் நமக்குமான உறவை மேம்படுத்துவது, பல்வேறு பிரிவுகள் கொண்ட மனிதர்களை ஒன்றாகப் பார்ப்பது. இவையெல்லாம் தான் ஒரு எழுத்தாளரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள் இப்படி தான் இருந்தார்கள்