சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் அடியக்கமங்கலம் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப் பார்த்து வியப்பது போல கும்மி வடிவில் இந்த நூலை எழுதியுள்ளார். ஜொகர் பாரு தெருக்களில் சுற்றித் திரிந்து அவற்றின் அழகை வியந்து செய்கு முகமது பாவலர் பாடுகிறார். ஜப்பானியர், மலேசியர், மஞ்சள் இந்தியர் உள்ளிட்ட பல இனத்தினர் தொழில் செய்தாலும், அதன் அளவை சிங்கை தொழில்களுடன் ஒப்பிடுகையில் ஆயிரத்தில்…