இளம் பெண் ஒருவரின் தலைமுடியை தாறுமாறாக வெட்டிய சலூன், வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மலேசியாவின் பினாங்கு பகுதியை சேர்ந்த இளம்பெண் அவர். தனது ஹேர்ஸ்டைலை அழகுபடுத்த நினைத்தார். வழக்கமாக அவருக்கு முடி வெட்டுபவர் பிசியோ பிசி. வேறு வழியில்லாமல், மற்றொரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் தலையைக் கொடுக்க முடிவு செய்தார். ஹேர்ஸ்டோரி இன்டர்நேஷனல் என்ற பிரபலமான சலூனுக்கு சென்றார். இவர் ஒரு ஸ்டைலை சொல்ல, அந்த ஹேர்ஸ்டைலிஸ்ட்டுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை… முடி வெட்டிய பிறகு பார்த்தால், அது…