உன் பார்வை என் இதயம் அல்லது ஆன்மாவின் மீது. ஆனால் இந்தப் புகை போன்ற ஒன்று… அது எங்கிருந்து? காலையின் முதற் கதிர் அந்தத் தீப்பந்திலிருந்து வரும்போது எந்த கொள்ளை போன இதயத்தை அப்படி உற்றுப் பார்க்கிறாய் வானமே… வீட்டிலிருந்து வெளியேறுவது போல என் இதயத்திலிருந்து வெகுண்டு அகலாதே என் வேதனைக்குரல் ஆகாயத்தில் எதிரொலிக்கையில் மனம் வலியில் துடிக்கிறது துள்ளித் திரியும் அவள் பார்வை சிறையா(க்)கும் இடத்தில் துன்பமும் தொல்லையும் பீறிடுகின்றன கொஞ்சம் வீட்டையும் ஓர்ப்பாயா மெல்லிசையே…