எனக்கு இந்நகரம் அந்நியப்பட்டு நிற்கிறது என் நினைவுகளில் அகல முடியாதவிலங்குகள் பல திரியும் காட்டில்இல்லாத சிங்கமொன்று உலவிக் கொண்டு அந்தக்கனவொன்றில் இந்நகரம் உறங்குகிறது. சேறு படிந்த மழை ஈரப்பிசுபிசுப்பில்நிலத்தைத் தோண்டினால்என் கம்பத்து வீட்டின் கூரைகள்கிடைக்கக்கூடும். சேவல்களின் முனகல்கள்கூரைக்கு அடியில் கேட்கக்கூடும். என் தோட்டத்தில் மலர்களுக்கு நடுவேமீன்களின் செதில்கள் சுவாசித்துக்கொண்டிருக்கக் கூடும். ஒளிரும் சூரியக் கதிர்களால் நிரப்பப்பட்ட அறைகளின்சாளரங்களின் கம்பிகளில்என் கவிதைகள் ஒளிந்து கொண்டிருக்கும். நெடுஞ்சாலைகளுக்கு அடியில்அடுக்குகளாக எங்கள் அத்தாப்பு…