1952-ல் நான் மலாயாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். ’தமிழ் நேசன்’ பத்திரிகையில் ஞாயிறு பதிப்பைத் தயாரிக்கும் முழுப் பொறுப்பும் என்னுடையதாயிற்று. ’`இந்நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள்’ என்று நூறு நூற்றைம்பது கதைகளைக் கொண்ட ஒரு கட்டு என்னிடம் கொடுக்கப்பட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. இந்நாட்டில் கதை எழுதக் கூடியவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
நான் மலாயாவில் போய் இறங்கிய போது. அங்கே கதை எழுதுகிறவர் என்று ஒருவர் இருப்பார் என்றே நான் நினைக்கவில்லை.