சிங்கப்பூர் எனும் ஒரு ஹைடெக் தீவில் , கான்கிரீட் வனந்தாரத்தில் இயற்கையையும், மனிதத்தன்மையையும் தேடி அலையும் சித்ரா ரமேஷின் குரல் தற்காலத் தன்மையுடைய ஒரு கவிதைக் குரல். இக்குரல் மென்மேலும் பட்டைத் தீட்டப்படுவதின் மூலம் கவிதையின் புதிய எல்லைகளைத் தேடிக்கண்டு பிடிக்கும் திராணியுள்ளது. இக்கவிதைகள் ஒரு ஹைடெக் நகரத்துச் சுவரில் தீட்டப்பட்டசுவரோவியங்கள் என்றே சொல்லுவேன்.