யாமம் நெருங்குகையில்கட்டுமானத் தளமிருந்துடார்மெட்ரி நோக்கிவிரையும் சுமையுந்தின்திறந்த பின்புறத்தில்நைந்த பேக் பையைஇறுக அணைத்துவேகத்தின் தாளத்திற்கு ஆடியவாறுஉறங்கும் வெளிநாட்டு ஊழியனின்தேகம் தீண்டும் காற்றில்துமிகளாய் வருடுகிறதுகடல் கடந்து காத்திருக்கும்தலைவியின் சிறுகோட்டுப் பெரும்பழம். ஓஃபோ மிதிவண்டியின் புலம்பல்நிறுத்தத்தில் உங்களோடுநிற்க நேரிடுகையில்தனிமைப்படுத்துகிறீர்கள்.என்னால்தான் உங்களைஎவரும் சீண்டுவதில்லையெனசாடை பேசுகிறீர்கள்.பிறந்த மண் விடுத்துஇங்கு வந்து மிதிபடுமென்அவலத்தைப் பகிர வருகையில்முகத்தை திருப்பிக்கொள்கிறீர்கள்.வசீகரிக்கும் எனது வண்ணம்உங்களை வதைப்பதாகபுலம்பித் தீர்க்கிறீர்கள்.எனது குறைகளைஊதிப் பெரிதாக்கிவெடித்து மகிழ்கிறீர்கள்.எப்போதோ எதற்காகவோஏதோ ஒரு தேசத்திலிருந்துஎன்னைப் போலவே நீங்களும்கப்பல் ஏறியதை மட்டும்வசதியாக மறந்துவிடுகிறீர்கள் அழகு நிலா…