தமிழகத்து எழுத்துலகம் எனும் கிணற்றில், சுமார் நாற்பது ஆண்டுகளாக ஜீவித்துக்கொண்டு வருமாறு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தவளை நான். இந்த கிணற்றுத் தவளை அவ்வப்போது கொஞ்சம் கிழக்கேயும் மேற்கேயும் போய்வருவது உண்டென்றாலும், இந்த முறை 2014க்கான சிங்கப்பூர் உலக எழுத்தாளர் விழாவில் பங்கு கொள்வதற்கு சிங்கப்பூர் கலை மன்றம் (Arts Academy Of Singapore) எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தபோது. உலக எழுத்தாளர்களை ஒரே கூரையில் வைத்துச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ந்தேன். உலகின் மிக முக்கியமான பன்மொழி இலக்கிய…