சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் ஆதரவுடன் நடத்தப்பட்ட ‘சிலம்பில் பதினோராடல்கள்’ எனும் digital presentation ‘சக்தி நுண்கலைக் கூட’த்தின் ஒருபுதுமையானமுயற்சி. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலிருந்து இசைநயம் வாய்ந்த பல பகுதிகளும், நாடகத்தின் நல்லியலையும், தமிழருடைய நாட்டிய வரலாற்றையும் அறிய முடியும். சிலப்பதிகார நூலில் பதினோரு ஆடல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ்வாடல்கள் ஆடப்பெற்ற முறை பற்றிய விளக்கங்கள், அக்கால நாட்டியங்கள் ஆடப்பெற்ற முறையை அறிய உதவுகின்றன. இவ்வாடல்கள் ஆடப்பெற்ற முறை பற்றிய விளக்கங்கள் மட்டுமே நம்மிடம் கிடைக்கப்பெற்ற நிலையில், ‘சிலம்பில் பதினோராடல்கள்’ என்னும் இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் ‘கலைமாமணி’ முனைவர் மா.சுப. சரளா அவர்கள் எழுதிய `தமிழ் இலக்கியத்தில் நாட்டிய வரலாறு’ எனும் ஆராய்ச்சி…