12-ஆம் நூற்றாண்டு நூல்களிலிருந்து, இன்றைய ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணனிலிருந்து, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படைப்புகள்வரை வாசிப்பதாலேயே விரல் துனியில், பம்மாத்து இலக்கியம் எது, தரமான இலக்கியம் எது, இலக்கிய காடேற்றிகள் யார் என்பதை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கணிக்க முடிகிறது. இன்றும் என்னுடைய எழுத்தில், அது சிறுகதையாகட்டும், நாடகமாகட்டும் அன்றாட வாழ்வியலில் நமது சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, பெண்களின் பிரச்னைகளை அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைத்தான் அதிகமாக எழுதுகிறேன். எனக்கென்று உள்ள வாசகர்கள்கூட அந்தக் கதைகளால்தான் கவரப்பட்டு என்னை வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.