பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் மாயக்கண்ணாடி நீ, உன் பாதச்சுவடுகளை பின்தொடர்வது ஒரு மர்ம தேசத்திற்கு வழிதேடி வெகுதூரத்திலிருந்து உன்னைக் கண்டாலும் உன் நிஜத்தைவிட மிக உயரமாகவே நீ தெரிகிறாய் மனக்கண்ணில் உன்னை சித்திரம் தீட்ட முற்பட்டு தோற்றுத், தலைகுனிந்து, தொலைந்தேபோகிறேன்… நான் உன்னை தேடிப்பிடுக்கும் போதெல்லாம் நீ வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கிறாய் நான் உன்னை உற்றுப் பார்க்கிறேன் நீ என்னை அலட்சியம் செய்கிறாய் நான் உன்னை இன்னும் அருகில் வைத்து பார்க்கிறேன் நீ வெகு யோஜனைகளுக்கு அப்பால்…