சிங்கை- ஜுஹர் பிரயாணக் கும்மி என்ற இந்த கும்மிப் பாடல் அடியக்கமங்கலம் செய்குமுகமது பாவலர் அவர்களால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. சிங்கை, மலேசியாவின் அழகையும் செழிப்பையும் கும்மி வடிவில் சொல்லும் பாடலை விளக்கும் இறுதிப் பகுதி இனி… பினாங்கு நகருக்கு சுற்றிப்பார்க்கச் செல்ல முடிவெடுக்கிறார் பாவலர். இன்னுமொரு நாள் சிங்கையில் தங்கச் சொல்லி நண்பர் சுல்தான் அறிவுறுத்த, நான்காவது நாளாக பாவலர் சிங்கையில் தங்குகிறார். பயணத்தில் நண்பர்கள் அளிக்கும் விருந்துகளுக்கு மறுப்பு சொல்லாமல் சம்மதிக்கும்படி சொல்கிறார். வெள்ளிக்கிழமை…