சுகமும் துக்கமும் நிரந்தர சோகம் எனக்கு வேண்டாம் சுகமும் துக்கமும் சேர்ந்த விளையாட்டே இந்த வாழ்வைத் திறக்கிறது. சுகமும் துக்கமும் எழிலாய் இணைந்த இந்த வாழ்வே பூரணம் பெறுகிறது. நிலவை மேகங்கள் சூழ்ந்து மறைப்பதும் நிலவினின்று மேகங்கள் மறைவதுமாக வாழ்வு பூரணம் பெறுகிறது. உலகம் துக்கங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறது. உலகம் சுகங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுகமான துக்கங்கள் அல்லது சோகமான சுகங்கள் என உலகத்து மாந்தர்கள் பிரிந்து கிடக்கின்றனர். முடிவில்லாத் துன்பம் பெருந்தொல்லை முடிவற்ற இன்பமும் தொந்தரவு சுகமும் துக்கமுமான…