சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப்பார்த்து வியப்பது போல கும்மி வடிவில் இந்த நூலை எழுதியுள்ளார். பூமலை, தண்ணீர்மலை போன்ற இடங்களை ரசிப்பவர், அடுத்து குதிரைப் பந்தயங்கள் நடக்கும் இடத்தையும், அதன் அருகே வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள சிறு தடாகத்தையும் காண்கிறார். “கட்டளை பெற்ற பல்திட்டப் பரிகளின் காலடிப்பந்தயம் பாலடியாம்” என்று அவர் குறிப்பிடும் பகுதி பழைய…