ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் புத்தகமாக வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக்காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் கடலுக்கு அப்பால் மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது என்பதை அவதானிக்கமுடிகிறது. இக்கட்டங்களை ஓரளவுக்குக் காலத்தொடர்ச்சியுடன் கூடியதாகவும் அதேவேளையில் அரைநூற்றாண்டுக்காலப் பரப்பில் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்ததாகவும் கூறலாம். இரண்டாம் உலகப்போர் முடிந்துவிடப்போவது உறுதியாகி மலாயாவின் மீதான மூன்றரையாண்டுக்கால ஜப்பானியரின் இரும்புப்பிடி நழுவிக்கொண்டிருந்த காலத்தின் அரசியல், சமூக விசைகளை முழுமையாக உள்வாங்குவதில் தமிழ் வாசகப்பரப்புக்கிருந்த சிக்கல்கள், ஒருபகுதி தீவாகவும் மறுபகுதி…