ஒரு கவிதையை வாசிப்பது, ஒரு கதையையோ கட்டுரையையோ வாசிப்பது போல சௌகரியமாகச் செய்யக்கூடிய வேலை அல்ல. அதற்கென்று ஒரு கூடுதல் சிரத்தை தேவையாக இருக்கிறது. ஒரு முழுநீள நாவல் தரும் நிறைவை ஒரு நல்ல கவிதையால் கொடுக்க முடியும் என்று நண்பர் ஒருவர் கூறுவார். அப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் நாவலுக்குச் செலவிடும் நேரத்தில் சிறிது அளித்தாலே அந்த உணர்வைப் பெற முடியுமாயின், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.