தமிழும் நானும் – ஹரிணி

0
175

எனக்கு அப்போது ஏழு வயது. இரட்டை சடையுடன் பள்ளிச்சீருடை அணிந்து தமிழ் வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். தமிழ் எழுத்துக்களை ஆசிரியர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். மற்ற மாணவர்கள் உரத்த குரல்களில் தமிழ் எழுத்துக்களைப் படித்துக்கொண்டிருந்தனர். நான் தலைகுனிந்து என் கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று ஆசிரியர், “உங்கள் மகள் ஹரிணிக்கு தமிழ்ப் புழக்கம் மிகக் குறைவாக உள்ளது,” என்று என் பெற்றோர்க்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார்.

அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஓய்வு பெற்ற திருமதி சுப்பைய்யா எனக்குத் தமிழ்த் துணைப்பாட வகுப்புகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு வாரமும் புத்தாக்கச் சிந்தனையுடன் தமிழ்ப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து தமிழ் மீது ஆர்வத்தைத் தூண்டினார். வீட்டில் அதுவரை ‘டிஸ்னீ’ மற்றும் ‘நிக்கலோடியன்’ பார்த்துக்கொண்டிருந்த நான் மெல்லமெல்ல ‘சன் டிவி’ பார்க்கவும் குமுதம், ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் ஒருபக்க சிறுகதைகளைப் படிக்கவும் தொடங்கினேன்.

தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றபோது மொழிமீதும் கலைமீதும் ஆர்வம் தொடங்கியது. நடிப்பு, மேடைப்பேச்சு, கவிதை என்று மிகவும் பிடித்த கலைகளில் எனக்கான முதல் தொடக்கத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தி வாய்ப்புகளை அமைத்துத் தந்தவர்கள் எனது தமிழாசிரியர்கள். ஒவ்வொரு வருடமும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என்று பலவற்றில் கலந்துக்கொண்டு சில போட்டிகளில் பரிசும் பெற்றேன்.

This content is for paid members only.
Login Join Now