மூன்று லட்சம் சொற்கள் | மஹேஷ்

0
216

சிங்கப்பூர் அதன் புவியியல், அரசியல், வியாபார மற்றும் பொருளியல் முக்கியத்துவத்தாலும், வரலாற்று ரீதியாகவும், காலனியாதிக்கத்தாலும் பல்வேறு மொழிகள் பேசும் மக்களின் வாழ்விடமாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய ஆய்வாளர் இயன் சிங்கிளேர் ‘சிங்கப்பூர் கல்’லில் இருந்த ‘கேசரிவ’ என்ற துண்டுச்சொல் ‘பரகேசரிவர்மன்’ என்ற ராஜேந்திர சோழனின் பெயர் என ஊகித்தது ஒரு பெரிய ஆச்சரிய அலையை உருவாக்கியதோடு, தமிழகத்திற்கும் சிங்கைக்குமான தொடர்பு குறைந்தது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்பதையும் வெளிப்படுத்தியது.

தமிழோடு சிங்கைக்கு ஒரு நீண்ட நெடிய தொடர்பு இருந்தாலும், உலகமும் மக்கள் நாகரிகமும் பல வழிகளிலும் முன்னேறி, பின்னர் ஆங்கிலம் முதன்மை ஆட்சி மொழியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதிலிருந்து இன்று வரை மொழிபெயர்ப்பு என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு உலக இணைப்பு மொழியாக அவசியத் தேவை காரணமாக ஆங்கிலத்தின் அசுர வளர்ச்சிக்கும் அதன் நெகிழ்வுத்தன்மைக்கும், தொழிநுட்ப வளர்ச்சியால் ஆங்கிலத்தின் சொற்களஞ்சியம் அதிவேகமாக நிறைய, அதற்குத் தகுந்த கலைச்சொற்களை உருவாக்குவதில் உள்ள சவால்களுக்கும் ஈடு கொடுப்பதில் சற்று பின்தங்கியே இருக்கிறோம். அது மட்டுமல்லாமல், மொழிபெயர்த்தல், எழுத்துரு மற்றும் ஒருங்குறியைக் கையாள்வதில் வேறுபாடுகள் இருப்பதும் ஒரு கூடுதல் சிரமமாக உள்ளது.

This content is for paid members only.
Login Join Now