வாழ்க வாழியவே!

0
38
திரு.செ.ப.பன்னீர்செல்வம்

நல்ல உள்ளம் படைத்த அண்ணன் முஸ்தபா அவர்களின் அயராத முயற்சியாலும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தளபதிகளாலும் இன்று சிங்கப்பூரில் தரமான மாத இதழாக ஒளிரும் ‘தி சிராங்கூன் டைம்ஸு’க்கு இது நூறாவது மலர். அதன் தொடக்கம் முதல் அதன் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைந்து வரும் அடியேன் இந்தக் கட்டத்தில் அதைப் பாராட்டிப் பெருமைப் படுகிறேன்.அண்ணன் முஸ்தபாவின் குறிக்கோள் நிறைவேற, முதன்மை ஆசிரியர் ஷாநவாஸ் அவர்களும் துணை ஆசிரியர்களும் அதன் படைப்பாளர்களும் பெரும் பொறுப்புகளை ஆற்றி வருகிறார்கள். சிங்கப்பூரின் படைப்பிலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், விமர்சனக்கலை ஆகியவற்றைச் செப்பமாக வழங்கி வருவதால் இதழியல் வரலாற்றில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தனிப் புகழ் பெறும் என்பது உறுதி.

சிறந்த தாள், சிறந்த அச்சு ஆகியவற்றால் இந்த வட்டாரத்தில் அது கண்டிப்பாக தேசிய விருதுகள் பெறும் காலக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டில் எத்தனையோ ஏடுகள் தோன்றி மறைந்தாலும் இங்குள்ள இளம் படைப்பாளர்களும் மூத்த எழுத்தாளர்களும் உறுதுணையாக இருப்பதாலும் வர்த்தகப் பெருமக்களின் உதவிக்கரங்கள் துணிவுடன் செயல்படுவதாலும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ என்றும் மலர்ந்து வரலாறு படைக்கும் என்பது திண்ணம்.

வளர்க! மலர்க! ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ வெற்றி பெறுக! அதன் ஆசிரியர் குழு பலப்பல புதுத் துறைகளில் படைப்பாக்கம் செய்யட்டும் அதன் நேசமிகு எழுத்தாளர் வட்டம். அண்ணன் முஸ்தபாவின் குறிக்கோள் நிறைவேறட்டும். வாழ்க எங்கள் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. வளர்க வெல்க அதன் செயல்வீரர்கள். இன்னும் பல்லாண்டு வாழட்டும்! பெருகட்டும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ படைப்பாளர் பட்டாளம்! வாழிய வாழியவே!!