பெடோக் தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்திருந்த பயனாளிகளை சந்தித்து துணைப் பிரதமர் ஹெங் உற்சாகமூட்டினார். இதைத் தொடர்ந்து தடுப்பூசி போடுவதன் அவசியத்தை ஹெங் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். “பெடோக் சி.சி.யில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தை நான் நேற்று பார்வையிட்டேன். அங்கு கோவிட் தடுப்பூசிகளைப் பெற வந்திருந்த மூத்த குடிமக்களிடம் பேசினேன். நான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். ஊசி போட்டுக்கொண்ட கையில் லேசான வலி இருந்தது, ஆனால், அது…

