எட்டு வயது மாணவனுக்குப் பிறந்த நாள் பரிசாகக் கிடைத்திருக்கிறது, அவனது பர்த் சர்டிபிகேட். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்றால், ஆச்சரியம்தான்! மலேசியாவின் பினாங்கு மாநில தலைநகரான ஜார்ஜ் டவுனில் வசிப்பவர் ராமதாஸ். இவருடைய எட்டு வயது மகன் சாலமன் விஜய். இரண்டாம் வகுப்பு படிக்கிறான். இவனுக்குப் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்குள் நொந்து வெந்துவிட்டார் ராமதாஸ். மலேசிய பதிவு துறையின் விதிகள் அப்படி. சாலமன் விஜய்க்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவன் அம்மா, குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார்….

