ஆதிநிலத்து மனிதர்கள் – 3 ராணி பரமிசுரியின் மகளை மணந்து நெடுநாட்கள் பெந்தானிலேயே தன் ஆசை மனைவி வான் ஶ்ரீபினியுடன் பொழுதுகளைக் கழிக்கும் சங் நீல உத்தமாவிற்கு அங்கிருக்கும் சிற்றாறுகளையே மீண்டும் மீண்டும் பார்த்து அலுத்துப் போகிறது. தன் தந்தையைப் போல புதிய இடங்களுக்குச் சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற விழைகிறான். அதனைத் தொடர்ந்து தஞ்சோங் பெம்பானுக்குச் செல்ல விரும்பும் அவன், மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மாமியாரிடம் அனுமதி கேட்கிறான். தன் மகளைப் பிரிய விரும்பாத…