வியட்நாம் நாட்டின் பிரதமர் நுயான் சூன் ஃபாக்குடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் லீ சியன் லூங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். “வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 13-வது தேசிய காங்கிரஸின் வெற்றிகரமான நிறைவுக்கும் வாழ்த்துவதற்காக, வியட்நாம் பிரதமர் நுயான் சூன் ஃபாக்கை நான் இன்று அழைத்துப் பேசினேன்.” “சிங்கப்பூர் வியட்நாமுடன் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது. நமக்குள் விரிவான பொருளாதார உறவுண்டு; நாம் பல தளங்களில் நெருக்கமாக…

