டிராபிக் சிக்னல்களில் பழ ஊறுகாய் விற்றாலோ, அதை யாரும் வாங்கினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மலேசியாவின் பேராக் மாநிலத்தின் இருக்கிறது, ஈப்போ நகரம். மிகவும் சுத்தமான நகரம் என்று கூறப்படும் இங்கு, டிராபிக் சிக்னல்களில் இப்போது பழ ஊறுகாய் (pickled fruits) வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அதாவது சிக்னல்களில் நிற்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இந்தப் பழ ஊறுகாய்களை விற்பவர்கள் அதிகரித்துள்ளனர். Photo Courtesy: thestar.com.my இதை அதிகமானோர் விரும்பி வாங்குவதால்,…

