இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட B16172 கொரோனா வைரஸின் உருமாற்றம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது. சமூகப்பரவலின் மூலம் கடந்த வாரத்தில் சிங்கப்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு விதிப்பையும், சர்வதேச எல்லைகளை மூடுவதையும் சிங்கப்பூர் தாமதம் செய்துவிட்டதோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை உருவாகியபோதே சிங்கப்பூர் விழிப்படைந்திருந்தால் தற்போது இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த…