கண்முன்னே விரிந்து கிடக்கும் கடல் பரப்பும் அதைத் தொட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் நகர கால்வாய் நதி நீர் சேரும் முகத்துவாரத்திலிருந்து எலிசெபத் வாக்கில் நடந்து கொண்டே நதியும், கடலும் சேர்ந்து காயல் பிறப்பெடுக்கும் முத்துப்பேட்டை முகத்துவாரத்தை எண்ணிப்பார்க்கிறேன். ‘எத்திசை செலினும் அத்திசைச் சோறே’ சங்க இலக்கியப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
இந்தச் சிறிய நிலப்பரப்பு பலமடங்கு நிலப்பரப்பு கொண்ட தேசங்களின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணியாக உருவானது எப்படி? எண்ணித் தீராத பேதங்களைக் கொண்ட பலதேச மக்களும் ஒன்றாய்க் கலந்து ஒற்றுமை கயிற்றைப் பிடித்தது எப்படி?