இரண்டரை மணி நேரத்தில் வாசித்துவிடக்கூடிய – பல நாட்டு உணவுகளையும் அவற்றை உண்ணும் மனிதர்களையும் குறித்த – சுவையான சிறு கட்டுரைகளின் தொகுப்பே ’அயல் பசி’.
அயல் என்ற சொல் நாடு என்ற சொல்லின் முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுவது தவிர மற்றபடி ஏதும் புழக்கத்திலில்லை. அந்த வகையில் வித்தியாசமான தலைப்பு ஈர்த்தது. ஆனால், வாசித்து முடித்தபின்பு ’அயல் ருசி’ என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று பட்டது. பசிக்காகச் சாப்பிடுவதும் ருசிக்காகச் சாப்பிடுவதும் வேறுவேறுதானே? அதோடு ‘பசி ருசி அறியாது’ என்பதும் பழமொழி!