‘மூவுலக’ சஞ்சாரமும்
முடிதிருத்தும் நம்பிக்கையும்!

சீனப்புத்தாண்டின் போது வெடிகளால் கம்பத்து வீடுகள் அடிக்கடித் தீப்பிடித்துக் கொள்வதும் தீயணைப் வீரர்கள் போராடித் தீயை அணைப்பதும் நடந்தன. புத்தாண்டுக் கொண்டாட்டங்கங் ஒருபக்கம் நடக்க இடையே கம்பத்து மக்கள் ஒன்றாகச் சேர்ந்து தீயை அணைக்கவும் உதவுவார்கள்.

சீனப் புத்தாண்டுக் கொண்ட்டாட்டங்களில் நியூ வர்ல்ட், கிரேட் வர்ல்ட், கே வர்ல்ட் (New World, Great World, and Gay World) என்று அழைக்கப்பட்ட ‘மூவுலகங்களுக்கு’ச் செல்வது வாடிக்கை. அறுபதுகளின் சிங்கப்பூரில் முதன்மையான பொழுதுபோக்குத் தளங்களாக விளங்கிய இம்மூன்று உலகங்களிலும் உணவுப் பண்டங்கள் விற்கும் கடைகள் (makan stalls), அதிர்ஷ்ட விளையாட்டுகள் (tikam stalls), இதர விளையாட்டுகள், உல்லாச சவாரிகள், சினிமா என்று அனைத்தும் உண்டு. சில கடைகளில் பிரம்பு வளையங்களை சொற்பமான தொகைக்கு இரவல் வாங்கி அவற்றை அங்கு பரப்பப்பட்டிருக்கும் பொருட்களின்மீது கணக்காக வீசிவிட்டால் அப்பொருட்களை நாமே எடுத்துக்கொள்ளலாம். இன்று அம்மூன்று ‘உலகங்களுமே’ இல்லை.

சீனப்புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் பிள்ளைகள் எவ்வளவு நேரம் உறங்காமல் கண்விழித்து இருக்கிறார்களோ அவ்வளவு நீண்டகாலம் அவர்களின் பெற்றோர்களின் ஆயுட்காலம் நீடிக்கும் எனச் சீனர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் பிள்ளைகள் கண்விழிப்பது உண்டு.

புத்தாடையைத் தவிர புத்தாண்டுக்குள் நுழையும்போது முடிதிருத்தம் செய்துகொள்வதும் நன்மையளிக்கும் என்று ஒரு நம்பிக்கை. முடிதிருத்துநர்கள் ஓய்வொழிச்சலின்றி வேலைசெய்யும் காலமாக அது இருக்கும். அவர்களும் கட்டணத்தைச் சற்று ஏற்றிவிடுவார்கள்.

ஆனந்தன் தர்மலிங்கம்

அத்தகைய குறுகியகால கட்டண உயர்வு இன்றும் ஒரு பழக்கமாகத் தொடர்கிறது. புத்தாண்டு அன்று தரையைத் துடைப்பம்கொண்டு கூட்டிவிட்டால் அதிர்ஷ்டத்தை அது துடைத்து வெளியேற்றிவிடும் என்று ஒரு நம்பிக்கை. ஆகவே அன்றுமட்டும்