மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியம்-முனைவர் மு.அ.காதர்

என் தொழிலில் எல்லா நேரத்திலும் நாடிவரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குக் களங்கம் வந்துவிடாமல் காப்பாற்றுவது மிகவும் முக்கியம். அறியாமையில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் மேலும் கூடுதலான சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்கிறேன்.

முனைவர் மு.அ.காதர்
பட்டயக் கணக்காய்வாளர்

எங்கள் நிறுவனத்தில் குடிநுழைவு தொடர்பான சேவைகளும் வழங்குகிறோம். ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், சிங்கப்பூரில் தொழில் துவங்கினால் நிரந்தரவாசம் உடனே கிடைக்கும் என்று கேள்விப்பட்டதாகச்சொல்லி அணுகினார். அவருக்குப் பொறுப்புணர்வோடு முழு விவரங்களையும் எடுத்துக்கூறி தகுந்த ஆலோசனைகளை வழங்கினோம். காலமாற்றங்களுக்கேற்பத் தொழிலில் தேவைப்படும் தகுதிகளைத் தொடந்து மேம்படுத்திய வண்ணம் இருக்க வேண்டியது தொழில் செய்வோரின் கடமை. அப்போதுதான் உலகத்தரமான சேவையை வாடிக்கையாளருக்கு வழங்க இயலும். சேவையில் வாடிக்கையாளர்கள் பூரண திருப்தி அடைவதை உறுதி செய்கிறேன். அதைப்போலவே எனது ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி, உரிய ஊதியம், தகுந்த அங்கீகாரம் என வழங்குகிறேன்.

வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாக உணர்ந்து, உரிய நேரத்தில், தரமான சேவைகளை, நியாயமான விலையில் வழங்குவதும் அனைத்திற்கும் மேலாக மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் நான் கைக்கொள்ளும் தொழில் தர்மம்.