திருப்புமுனை

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2023

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2023 அறிவிப்பு வந்துவிட்டது. நடக்கவிருப்பது 26ஆம் முறை. இவ்வாண்டு நவம்பர் 17-26 தேதிகளில் ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டட் ஒருங்கிணைப்பில் தேசிய கலை மன்ற ஆதரவுடன் பத்து நாள்கள் நடக்கவுள்ள இவ்விழாவின் கருப்பொருள் ‘திருப்புமுனை’.

இவ்விழாவில் சுமார் 200 நிகழ்ச்சிகளை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் நேரில் கண்டுகளிக்கலாம். உள்ளூர், வெளிநாட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் என ஏறக்குறைய 250 பேர் கலந்துகொள்கின்றனர். விரைந்து விழா அனுமதி அட்டை வாங்குவோருக்கு விலைக்கழிவு உண்டு. விழாவில் இடம்பெறும் தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.