நூல் அறிமுகம்

0
224
ஷாநவாஸ்

வண்ண வண்ண ஆர்க்கிட் / வாலோடு பிறந்தவன் /
கருப்பு வண்ணப் பூனை / ஒற்றைக் கொம்பு குதிரை
சிறுவர் பாடல் நூல்கள் (மணிமாலா மதியழகன் / சுய பதிப்பு / 2023
நூலைப் பெற: மணிமாலா மதியழகன் 87258701

இந்நூல்களில் உள்ள பாடல்கள் பாலர் பள்ளி மாணவர் முதல் தொடக்கநிலை இரண்டு வரையுள்ள மாணவர்களுக்கு உரியவை. தேசிய தினம், ஈகைத் திருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி கொண்டாட்டம்; ஆர்க்கிட், டுரியன், தமிழ்மொழி, நூலகங்கள், விளையாட்டு மைதானம் இவை போன்றவற்றுடன் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகளைப்பற்றிய பாடல்கள் உள்ளன. A4 அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் பத்து பாடல்களும் பாடல்களுக்கேற்ற கண்கவர் வண்ணப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆழிப்பெருக்கு
சிறுகதைத் தொகுப்பு (மணிமாலா மதியழகன் / சுய பதிப்பு / 2023
நூலைப் பெற: மணிமாலா மதியழகன் 87258701

வெவ்வேறு கதைக்கருக்களை உள்ளடக்கிய பதினான்கு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரங்களின் வழி, சம காலத்தில் வாழ்பவர்களின் ஆழ்மனக் கொந்தளிப்பு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அறிமுகம் வெளியிட விரும்புவோர் அச்சில் வெளியான நூல்களின் (கவிதை, புனைவு, படைப்பூக்க அபுனைவு) நூல்குறிப்பை (30 சொற்களுக்கு மிகாமல்) பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பாளர் விவரம், நூலின் முன்னட்டைப்படம், சிங்கப்பூரில் கிடைக்குமிடம், தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]