இதழியல் சவால்கள்

0
126
ஷா நவாஸ்

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் அச்சு ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் – டிஜிட்டல் தாக்கத்தில் இளையர்களிடையே வீழ்ச்சியடையும் புத்தக வாசிப்பு – பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இவைகள் ஊடகங்களில் செயல்படும் விதம் கணினி, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் எழுத்துருக்களை நவீனமாக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து அருண்மகிழ்நன், முத்து நெடுமாறன், கனகலதா ஆகியோர் “தி சிராங்கூன் டைம்ஸ்” 100 வது இதழ் வெளியீட்டு விழாவின் ஒரு அங்கமாக நிகழ்ந்த உரையாடலின் தொகுப்பு. உரையாடல் நெறியாளர் மஹேஷ் குமார்.

குறிப்பு: இந்தக் கலந்துரையாடலில் ஆங்காங்கே ஆங்கிலச் சொற்கள் கலந்த, பேச்சுத் தமிழில் வெளியிடுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறோம் என்ற கேள்வியும் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த உரையாடல் தொகுப்பையும் ஒரு சோதனை முயற்சியாகப் பேச்சுத் தமிழிலேயே வெளியிட்டால் என்ன என்ற ஒரு எண்ணமும் தோன்றியது.

மஹேஷ்: அச்சு இதழ்கள் ஒரு நாளிதழாகவோ, பருவ இதழ்களாகவோ எதுவாக இருந்தாலும் டிஜிட்டல் தாக்கம் வந்ததிலிருந்து கடுமையான சவால்களை சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஏதாவது ஒரு விதத்தில் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு வந்தாலும் கூட நம்ம சிங்கப்பூர் மாதிரியான நாட்டிலேயும் சரி, தமிழ்நாட்டிலேயும் சரி, தமிழில் வாசிப்பு என்பது பள்ளியில் படிக்கிறாங்களே ஒழிய பரீட்சை எல்லாம் முடிந்த பிறகு தமிழ் தொடர்பு விட்டு போய் விடுகிறது. அதுக்கப்புறம் ஒரு பேச்சு தமிழாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. இப்ப வாட்சப்பில் கூட ஆங்கிலத்தில்தான் தமிழை டைப் செய்யறாங்க. இந்த நிலையில சிராங்கூன் டைம்ஸ் மாதிரியான ஒரு தீவிரமான இதழ்கள் இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு relevant ஆக இருக்கும்? இல்ல ஒரு boomer இதழாகப் போயிடுமோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு. அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
கனகலதா: இளையர்கள் எப்படி வாசிக்கிறாங்க என்பதைப் பற்றி சில நூல்களும் பத்திரிகைகளும் ஒரு ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டு இருக்காங்க. அதாவது பலர் நினைக்குறதுக்கு மாறாக சிங்கப்பூர்ல வாசிப்புச் சூழல் இருக்கிறது என்றும் குறைந்து விடவில்லை என்றும் சொல்றாங்க. அதாவது எல்லா மொழிகளிலேயும் பள்ளிகளில் வாசிப்பை எப்படி ஊக்குவிக்கிறாங்கன்னு தெரியலை. என்ன மாதிரியான வாசிப்பு இன்னைக்கு பள்ளிகளில் சொல்லிக் கொடுக்குறாங்கனும் தெரியல. ஆய்வுகள் எல்லாம் வாசிப்பு இருக்குன்னு போடுறாங்க. ஆனால் பத்திரிகைகள் Straits Times, தமிழ் முரசு மாதிரியான பிரிண்ட் இதழ்கள் குறைஞ்சிக்கிட்டே வருது. பெரிய அளவில் குறைச்சிட்டே வருகிறது. பேப்பர் வாங்கி வாசிக்கிற விகிதமும் குறைந்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனையை தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் புதுப்புது இதழ்கள் வந்துட்டு இருக்கு. பத்திரிகைகள் வந்துட்டு இருக்கு. மற்ற நாடுகளோடு சிங்கப்பூரை ஒப்பிட முடியுமான்னு தெரியலை. ஆனால் வாசிப்பு பழக்கம் இருக்கு நிச்சயமாய் இருக்கு. ஆனா என்ன மாதிரி வாசிக்கிறாங்க எந்த ஊடகத்தை வாசிக்கிறாங்க என்பதுதான் முக்கியமான கேள்வி.
ஏன்னா நிறைய மாணவர்கள் பொதுவாக நீங்க பயணிக்கும் போது பார்க்கலாம், ரயில்களில் பேருந்துகளில் எல்லாருமே வாசிப்பதற்கு கைப்பேசி தான் உபயோகிக்கிறாங்க. புத்தகங்களை கையில் எடுத்து படிக்கிறது ரொம்ப குறைவு. அதே மாதிரி நூலகங்களில் பார்த்தோம் என்றால் நூல்களை எடுத்து வாசிக்கிறவங்க

மற்ற நாடுகளோடு சிங்கப்பூரை ஒப்பிட முடியுமான்னு தெரியலை. ஆனால் வாசிப்பு பழக்கம் இருக்கு நிச்சயமாய் இருக்கு.

ரொம்ப குறைவு. மின்நூல்கள் வாசிப்பாங்க. அங்க உட்கார்ந்து ஆன்லைன்ல வாசிச்சிட்டு இருப்பாங்க. அப்படி வாசிக்கிறது குறைவாக இருந்தாலுமே பெரியவர்கள் கூட சிங்கப்பூர்ல மத்த நாடுகளை விட வயசானவர்கள் அதிகமாக மின் நூல்களையும், இணையதளத்துலேயும் வாசிக்கிறாங்க. நூலகத்திலும் மின் நூல்கள் வாங்கி வைத்திருப்பதால் பெரியவர்களும் வயசானவர்களும் அவைகளையே வாசிக்கிறாங்க. இந்த சமூக ஊடகங்களும் ஒரு வாரம் கழித்தோ, ஒரு மாதம் கழித்தோ தகவல்களை பதிவிடாமல் உடனுக்குடன் சமயத்தில் வந்து நல்ல தகவலோ, கெட்ட தகவலோ உடனடியாக அடுத்த நொடியிலேயே வந்துவிடுகிறது.
தமிழிலும் வாசிக்கிறாங்க. ஏன்னா சில விஷயங்கள் தமிழில் தான் ஆழமாக கிடைக்கும். உதாரணமா சமயம் சார்ந்த விஷயம் ஆங்கிலத்தில் வந்தாலுமே தமிழில் வாசிக்கிறதுக்கு அதுல ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கு. ஆனால் சிங்கப்பூரில் ஆழமாக தீவிரமாக சிங்கப்பூர் நேயர்கள் தமிழில் நிறைய விஷயங்களை வாசிக்கலன்னு சொல்லலாம். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கு. அதுக்கு மேல அதை எடுத்து செல்வது சமூகத்தோட பொறுப்புன்னு தான் நினைக்கிறேன்.
மஹேஷ்: அருண்… சிற்றிதழ்கள் எல்லா நாடுகளிலேயும் நிறையவே இருக்கு. எந்த மொழியா இருந்தாலும் small target audienceகான இதழ்கள் இருக்கு. ஆனா இவைகளை நிறுவனப்படுத்தும் போது சில சிக்கல்கள் வருது. நிறுவனப்படுத்தப் போனால் நிறைய சமரசம் செய்ய வேண்டி இருக்கு. இது இரண்டுமே எதிரெதிர் நிலைகள் மாதிரி இருக்கு. அப்போ இதழை institutionalize பண்றதுக்கு அந்த இடைவெளியை எப்படி bridge பண்ணலாம்? அதைப் பற்றி உங்களுடைய எண்ணங்கள் என்ன…?
அருண் மகிழ்நன்: ஒரு சிற்றிதழை instituitionize பண்றதுக்கு அதை வந்து ஒரு நிறுவனம் ஆக்குவது அப்படின்னு சொன்னா நீங்க முதலில் சொல்லிய மாதிரி பயமா இருக்குனு… ரொம்ப பயப்பட வேண்டிய விஷயம் தான். நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தமிழ் ஊடகங்கள் பற்றி ஒரு கலைக்களஞ்சியத்துக்காக ஆய்வு செய்து வருகின்றோம். நூற்றுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளை, நாளிதழ்களை ஆய்வு செய்திருக்கின்றோம். ஆனால்

பெரும்பாலும் அவைகள் எப்படி வருதுன்னு சொன்னா ஒரு தனி ஆள்; தன்னுடைய பேரவா…. அப்படிங்கிற அடிப்படையில் தான் பெரும்பாலான ஊடகங்கள் பெரும்பாலான பத்திரிகைகள் சிங்கப்பூர்ல வந்துகிட்டு இருக்கு. அதனால்தான் ஒரு சில இதழ்கள் இரண்டு அல்லது மூன்று இதழ்கள், சிலது சில வாரங்கள், சிலது சில மாதங்கள், சில ஆண்டுகள் இதுதான் நம்ம வரலாறு. ஆனா தரமான சஞ்சிகை வேணும்னு சொன்னா முதல்ல ஆள் பலம் வேணும். இந்த பணபலத்தை விட ஆள் பலம் அதாவது மூளை பலம்தான் மூலதனம் அது இல்லாம சஞ்சிகையை ஆரம்பிக்கவே கூடாது.
ஆனால் பல பேர் அப்படித்தான் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இந்த ஆள் பலத்துக்கு மேலாக அது பெரிய அளவுல பரவ வேண்டும் என்றால் அதுக்கு ஒரு அமைப்பு வேணும். நான் ஷா நவாஸ் கிட்ட வலியுறுத்தி இருக்கேன். உங்களுக்கு அப்புறம் இது நடக்குமா? நடக்க முடியுமா? அப்படிங்கறது தான் முதல் கேள்வியா இருக்கு. என்னால இதை செய்ய முடியும்னு ஆரம்பிக்கிறது அபத்தமான ஒன்று. ஆகவே அது அடுத்தடுத்து தொடர முடியுமா என்பது மிக முக்கியமான கேள்வி. அதுக்கு தான் ஒரு institutionalising வேணும்னு சொல்லுகிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆரம்பித்த ஒரு அமைப்பை இப்பதான் பதிவு செய்தோம். ஆனால் இந்த ஆர்வம் மிகவும் முக்கியம். அத்தோடு அடுத்து தொடரக்கூடிய அடுத்த தலைமுறைகள் முக்கியம். இது போக இதனை நாம் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதுக்கு பணபலம் தேவை. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த காலத்தில் அச்சிட்டு வெளியிடுகிற ஒரு சஞ்சிகைக்கும் அல்லது தொலைக்காட்சியில் வெளியிடற ஒரு நிகழ்ச்சிக்கும் பெரும்பணம் தேவையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒரு செல்போன் தான் தேவை. இதை வச்சுக்கிட்டு நீங்க broadcast பண்ணலாம். ஒரு

பத்திரிகை பத்திரிகையாளராக வரலாம். ஒரு சீனரிடம் 54 மில்லியன் பார்வையாளர்கள். பாலோ செய்யும் ஒரு மீடியா இருக்கிறது 54 மில்லியன் பார்வையாளர்கள் அவர் தனியாளாக பார்க்கிறார், அப்போ இதுல இருந்து என்ன தெரியுது என்றால் வருங்காலத்தை வெல்வதற்கு பணம் தேவையில்லை பெரிய பெரிய கருவிகள் தேவையில்லை ஒரு சிறு கருவி போதும்.
ஆகவே எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் போது நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது மூலதனம் மூளை. அப்புறம் imagination அதாவது கற்பனை வளர வேண்டும். இந்த செய்திகளை சொல்லும் போது சுவைபட சொல்லுதல்தான் வேண்டும் இதுதான் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அடிப்படையான கருத்து.
மஹேஷ்: இப்ப அச்சு இதழ்களில் இருந்து டிஜிட்டல் eraவுக்கு போகும்போது ஒவ்வொரு அச்சு இதழ்களுக்கும் content Identity மாதிரி அந்த எழுத்துரு கூட ஒரு identity ஐ கொடுக்குது. அப்ப இந்த டிஜிட்டலுக்குள்ள போகும்போது 2D எழுத்துலேருந்து இப்ப Meta மாதிரி உள்ளபோகும்போது எழுத்துல அந்த மாதிரி ஏதாவது தொழில்நுட்பம் நடந்துட்டு இருக்கா?

வெறுமனே ஆன்லைன்ல போட்டு நாங்க டிஜிட்டலா போடறோம்னு சொல்றதெல்லாம் அபத்தம்.

முத்து நெடுமாறன்: கட்டாயம் நடந்திட்டுருக்கு. எப்படின்னா அச்சு அல்லது இதுவரைக்கும் இருந்த கருவிகளில் நீங்க சொன்ன மாதிரி 2 dimensionலதான் பாக்குறோம். பார்க்கும் திரையை நேராத்தான் பார்க்கிறோம். ஒரே ஆங்கில்ல தான் பார்க்கிறோம். ஆனால் Meta Virtual Reality அந்த மாதிரி கண்ணாடிகளை பார்க்கும்போது Virtual Contrast ன்னு சொல்லுவாங்க. அந்த திரையுனுடைய அளவு வந்து அளவற்றது அது மட்டும் அல்லாமல் திசை. எந்த நோக்கத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நேரா பாக்குற தன்மை வேற. சைடுல பார்க்கிற தன்மை வேற. அதுக்கு ஏற்ற மாதிரி எழுத்துரு அமையனும். Contrast கொஞ்சம் அதிகம் வேணும், பளிச்சுன்னு தெரியணும் அப்படினு சொல்ற ஆய்வுகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. ஒவ்வொன்றிலும் புதுமைகள் இருந்து கொண்டே இருக்கும். அறிவியல் கூறுகளும் இருக்கும். அதாவது legibility and lineability

என்ற இரண்டு கோட்பாடுகள் இருக்கு. எழுத்து உருவாக அந்த எழுத்து “க” என்று சொன்னால் அது “க” ன்னு தனியாக தெரியணும். அதுதான் legiblity. கலந்துரையாடல்னு ஒரு சொல் வந்துச்சுன்னா அதை உடனே கலந்துரையாடல்னு படிக்கணும். நேரா பாக்குறதுக்கும் ஓரமா பாக்குறதுக்கும் மேலே கீழே இன்னொன்னு என்னன்னா நாம பார்க்கும் போது கூடவே வர்ற எழுதுக்களாவே இருக்கணும். It’s no more static… but dynamic text. தூரமா போகும்போது எழுத்துக்கள் பெருசாகும், சின்னதாகும். எழுத்துரு கூட ஒரே அளவுல ஒரே நிலைல இருக்கக்கூடிய

எழுத்துருக்களாக இருக்காது. தொழில்நுட்பம் மாறாது. Dynamic Change என்று சொல்வார்கள். நடனமாடும். அந்த காட்சிகளுகேற்றவாறு நிறங்கள் மாறும், வடிவங்கள் மாறும். இதற்கெல்லாம் ஆய்வுகள் நடந்துகிட்டு இருக்கு. ஆனா அந்த ஆய்வுகள் இந்திய மொழிகளுக்கு குறிப்பாக தமிழ் மொழிக்கு இருக்கிறதா என்று தெரியல. எனக்குத் தெரிந்த நண்பர் “தேவனாகிரி” எழுதுறவரு. ஹிந்தி, மராத்தி ஆகிற மொழிகளுக்கு Virtual Reality பயன்படுத்தும்போது என்னென்ன கூறுகள் இருக்கணும்னு அதை வைத்துக்கொண்டு தான் நம்ம தமிழுக்கும் அது வரணும்னு எழுதி இருக்காங்க.


மஹேஷ்: இதுவரைக்கும் 100 இதழ்கள் பண்ணி இருக்கோம் ஒவ்வொன்றும் 48 பக்கங்கள் மொத்தம் 4800 பக்கங்கள் கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் அதை ஸ்கேன் பண்ணி மறுபடியும் Web ல போட்டுருக்கோம். ஆனா அதெல்லாம் PDF ஆக இருக்கு. நிறைய digitize பண்ணாங்க. கடந்த 10 வருஷமா நிறைய பழைய இதழ்கள், பழைய கதைகள் எல்லாம் ஸ்கேன் பண்ணி வச்சிருக்காங்க. ஆனால் எதுவுமே searchable ஆக இல்லை. அப்போ உங்களுடைய டைப்போகிராபில அதாவது ரிவர்ஸ் பண்ணி இருக்கிற scanned ஐ OCR Technology use பண்ணி அதை searchable ஆக பண்றதுக்கு ஏதாவது நடந்துட்டு இருக்கா.. இப்போது?


முத்து நெடுமாறன்: நாம தேடி எடுக்கணும். கட்டாயம் அந்த தொழில்நுட்பம் இருக்கு. தமிழ் digitize பண்ணவங்களும் இப்படித்தான் பண்ணியிருக்காங்க. அந்த அச்சு நீங்க திரையில பார்க்கிறது தான் அந்த அச்சிலையும் இருக்கு. நீங்க search பண்ணலாம்; select பண்ணலாம். அந்த நுட்பம் கட்டாயம் இருக்கு. தமிழுக்கும் இருக்கு.
எல்லா மொழிகளுக்கும் இருக்கு அதை தேடி பெற்றுக் கொள்ளணும். நீங்க ஸ்கேன் பண்ணி எடுத்தாலும் இரண்டு விதமாக காட்டலாம். அந்த புத்தகம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதே வடிவத்தை இப்ப காண்பிக்கலாம். 1928இல் ரோஜா முத்தையா லைப்ரரில அப்படித்தான் பண்றாங்க. அந்த காலத்தில் எப்படி அச்சிடப்பட்டதோ அதே பார்வை, அதே காட்சி நமக்குத் தெரியும். ஆனால் அந்த text வந்து searchable. இதுல இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் “லை” பெரியாருக்கு முன்னர் இருந்த “லை”லாம் அந்த அச்சுக்குள்ள வந்து அப்படி இருக்கும். ஆனால் நீங்க காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும்போதெல்லாம் புது எழுத்துல வரும் ஏன்னா அது பொருள் மாறாது. வடிவம்தான் வேற. அதனாலதான் அந்த தொழில்நுட்பம் இருக்கு. அது கொஞ்ச நாளைக்கு முன்பே வந்திருச்சு. அதாவது OCR embedded text image என்றால் image க்கு பின்னால் ஒரு text இருக்கு.

மஹேஷ்: தமிழ் முரசுல டிஜிட்டலோடு போட்டி போட உள்ளடக்கத்துல என்ன வித்தியாசப்படுத்த முயற்சி நடக்குது? Contentஐ எப்படி differentiate பண்ணணும்னு ஏதாவது ஒரு வரைமுறை இருக்கா? எல்லா இதழ்களும் ஒரே மாதிரி கன்டென்ட்தான் இருக்கு.
கனகலதா: நாளிதழுக்கும் இதர online magazineகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நாளிதழ்ல content differente பண்றது, நம்ம சிங்கப்பூர்ல நடக்குற சமூக நிகழ்ச்சிகள் அதோடு தமிழ் சார்ந்த செய்திகளை அதிகமாக போடுறாங்க. அதே வந்து printல போடுறத விட வீடியோவுல ரொம்ப சின்னதா சுருக்கமான விஷயங்களா இருக்கும். அதே instagram-ல போடும் போது இன்னும் குட்டியா இருக்கும். அதற்குப் பிறகு online revision வேற இருக்கும். நாம சின்னதா அதை edit பண்ணிதான் அச்சுல போடணும். சில நேரம் ஆன்லைன்ல பெருசா இருக்கும். சில நேரம் அச்சுல பெருசா இருக்கும். சிங்கப்பூர்ல செய்தி சொல்றதுக்கு தமிழ் பத்திரிகைகள் தேவை இல்லை. யாரும் தமிழ்ல செய்தி படிக்கிறதும் இல்லை. பொதுவாக மத்த ஆங்கில ஊடகங்களிலோ இல்ல மத்த ஊடகங்களிலோ இல்லாத விஷயங்களைத்தான் தமிழ்முரசுல போட்டுட்டு இருக்காங்க.

அருண்: சிராங்கூன் டைம்ஸ் ஆரம்ப காலத்துலேர்ந்து நீங்க செய்யுற முயற்சிக்குப் பெயர் born digital னு சொல்கிறோம். எல்லோருமே கம்ப்யூட்டர்லதான்

செய்யறீங்க. அதைத்தான் born digitalனு சொல்றோம். அச்சுல இருக்குறதெல்லாம் digitalதான்; ஆனால் eZine கிடையாது. eZine ன்னா சில இலக்கணங்கள் இருக்கு. eZineல எழுத்து, ஒளி, ஒலி மூன்றுமே போடக்கூடிய ஊடகம்தான். வெறுமனே ஆன்லைன்ல போட்டு நாங்க டிஜிட்டலா போடறோம்னு சொல்றதெல்லாம் அபத்தம்.
மஹேஷ்: சிங்கப்பூரில் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. இன்றைய வரைக்கும் இதழ் என்று வரும்போது நாம எப்பவுமே எழுத்துத்தமிழ்தான் உபயோகிக்கிறோம். பேச்சுத் தமிழுக்கு மாற்றத்தில் என்ன கஷ்டம் வர முடியும்? பேச்சுத் தமிழில் ஒரு magazine வந்தால் மக்கள் படிக்க மாட்டாங்களா? இல்லையென்றால் நாமாகவே வந்து அந்த நிலையை ஏன் குறைக்கணும்னு ஒரு பிரம்மைல இருக்ககோமா? நமக்கு அந்தத் தயக்கம் ஏன் இருக்கு? நாம ஏன் பேச்சுத் தமிழுக்கு போக முடியாது?
கனகலதா: புனைவு நூல்கள் பேச்சுத் தமிழில்தான் எழுதி வருகிறார்கள். கட்டுரைகள், பொருள் மற்ற விஷயங்கள் எல்லாம் எழுத்து தமிழில் எழுதுவதற்கு காரணம் பேச்சு தமிழ் என்பது நிறைய ஊடகங்களில் வட்டாரத்துக்கு வட்டாரம், வீட்டுக்கு வீடு கூட மாறுபடுகிறது. சிங்கப்பூரில் பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுத் தமிழில்தான் படிக்கிறார்கள். பேச்சுத் தமிழில் வரும்போது

கட்டாயமாகத் திணிச்சி மிகவும் முறையில்லா செயலாக்கத்தில் கொண்டு போறது மொழிப்பழக்கத்திற்கு மிகவும் எதிரானது. 

அவர்களுக்கு படிக்க சுலபமாக இருக்கிறது. பேச்சு தமிழ்ல இருக்கிறது கொண்டு போய் மாணவர்களுக்கு சேர்க்க வசதியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். எழுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கலாம். இப்ப சிங்கப்பூரில் “சிங்கிலிஷ்” தான் எல்லாரும் பேசுகிறார்கள். ஏன் ஆங்கிலம் மாத்திரம் சிங்கிலீஷா இருக்க கூடாதுன்னு சொல்றோம். நாம மொழித் தீவிரவாதி எல்லாம் கிடையாது.
மொழி உங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கணும் என்றால் நீங்க பேச்சு தமிழாக்கி பேச்சுத்தமிழை எழுத்து தமிழ் ஆக்கும் போது ஏற்கனவே அப்படித்தான் மாறி இருக்கிறது. இப்போது நிறைய மாறி மாறித்தான் வந்திருக்கிறது. உதாரணத்திற்கு “முயற்சி செய்தால்” அப்படித்தான் சொல்வார்கள் “முயன்றால்” அப்படின்னு சொல்ல மாட்டாங்க. அந்த வார்த்தை பிழையா வந்துருச்சு. பயன்படுத்தும் சில சொற்கள் வார்த்தைகளாக வந்து எழுத்து தமிழுக்கு ஏற்றதாக வந்துட்டே இருக்கு. ஆனால் கட்டாயமாகத் திணிச்சி மிகவும் முறையில்லா செயலாக்கத்தில் கொண்டு போறது மொழிப்பழக்கத்திற்கு மிகவும் எதிரானது என்றுதான் நான்நினைக்கிறேன்.
மேல்நாட்டில் உள்ள தமிழர்க்கு குறிப்பாக மியான்மர் நாட்டில் தமிழ் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. தமிழில் பிறந்து வளர்ந்தவங்களே கூட வெளியில் இருக்கிற போது அவங்க வேறு மாதிரி மியான்மரில் தான் எல்லாம் பேசுகிறார்கள். மற்ற நாடுகள்ல போய் பார்த்திருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் ஒரு பெரும் தமிழ் சமூகத்துக்கு தமிழ் இல்லாமல் போகும் என்று சொல்கிறோம். பேச்சு தமிழில் பேச்சுத்தமிழ் மட்டுமே இருந்தால் கண்டிப்பாக இந்த நெருக்கடிகள் வந்திருக்காது. சிந்தனையோடு பேசுவதற்கு எழுத்து தமிழ் முக்கியமாகிறது. இப்போது நீங்கள் நிறைய டிக் டாக் போடலாம் இன்ஸ்டாகிராம் போடலாம் ஆனால் அவைகள் வெறும் கிளிப்கள் ஆகத்தான் இருக்கும் ஆழ்மன சிந்தனைக்கு எழுத்துக்கள்தான் உரம். அதுதான் கண்டிப்பாக சிந்தனையை காட்டும். அந்த எழுத்துக்களில் ஒரு இலக்கண வடிவம் இருப்பதால் இதுவே தேவை என்று நினைக்கிறேன்.
அருண்: என்னுடைய ஊடக வாழ்க்கையே 1959 ஆம் ஆண்டில் வானொலியிலேயே தொடங்கிடுச்சு. அப்ப எல்லா நிகழ்ச்சிகளிலும் பேச்சுத் தமிழ் இருக்காது. நாடகத்தை தவிர மற்ற அனைத்துமே எழுத்துத் தமிழ்லதான் இருக்கும். நாங்கள் அந்த காலத்துல ஒரு காலும் பேச்சு தமிழில் அறிவிப்புகள் செய்ததே கிடையாது. அதுக்கு அப்புறம் நாடகத்தில் மட்டும் அத அனுமதிச்சாங்க. இலக்கிய

நாடகங்கள் என்று நடக்கும்போது எழுத்துத் தமிழ்தான் இருக்கும். இந்த பேச்சுத் தமிழுக்கும் ஒரு இலக்கணம் இருக்குங்குகிறது எனக்கு ரொம்ப நாளைக்கு தெரியாது. அதை ஒரு அமெரிக்க ஆங்கிலேயர் சொல்லித்தான் தெரியும். ஸ்டாண்டர்ட் ஸ்போக்கன் தமிழ்
அப்ப அதிலிருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா பேச்சுத் தமிழ்னு வந்துட்டா அதுல பெரிய போராட்டமே இருக்குதுன்னு. எந்தப் பேச்சுத் தமிழ்? பிராமண தமிழா? செட்டியார் தமிழா? முஸ்லிம் தமிழா? இது மாதிரி பல கேள்விகள் இருக்கு அதுக்கு தான் அவர் சொன்னது ஸ்டாண்டர்ட் ஸ்போக்கன் தமிழ், அப்ப எங்க இருக்கு ஒரு சமூக வழக்குல என்ன பேசுவாங்க அதுதான் இப்ப வந்து வானொலியில் ரொம்ப இயல்பா கேட்கிறோம். பேச்சுத் தமிழை ஊடகத்துலேயே நான் சின்னதா

நாளாவட்டதுல ஒரு மொழி, ஒரு நாட்டுல, ஒரு சமூகத்துல அதிலேயும் இந்த மாதிரி புலம் பெயர்ந்த சமூகங்கள்ல எப்படி மொழி வாழுது அப்படின்னு யோசிக்கும்பொழுது இந்த “எழுத்துத் தமிழ் தான் உயிர்நாடி”ன்னு தோணுது.

ஒரு சோதனை பண்ணலாமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். தொலைக்காட்சியில் ஆலோசனை குழு தலைவராக இருந்தேன். செய்தியை இதுவரைக்கும் எழுத்துத் தமிழ்லதான் செய்துக்கிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக பேச்சு தமிழில் ஒருத்தர்கிட்ட ஒரு விஷயத்தை செய்திகளை பரிமாறிக்கிறோமோ அது மாதிரி யோசிச்சு ஒரு Pilot Programme செய்யலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா நான் அதிலிருந்து விலகி விட்டேன்.
அதைச் செய்யவே இல்லை. ஒரு நிலையத்தின் முக்கியமான நிகழ்ச்சியா செய்தி இருக்கு. அதை ஏன் பேச்சுத் தமிழ்ல பண்ணக்கூடாதுன்னு ஒரு கேள்வி வந்தது. இதுவரைக்கும் யாரும் செய்தது இல்லை.அதே மாதிரி ஒரு ஊடகத்துல எடுத்துக்கங்க. பிரதமர் என்ன பேசிட்டு இருக்காரோ அத நாம இங்க பேசிட்டு இருக்கிற மாதிரி எழுதுனா புரியுமா? புரியாது அல்லது நமக்கு கொஞ்சமாத்தான் புரியும். நாளாவட்டதுல ஒரு மொழி, ஒரு நாட்டுல, ஒரு சமூகத்துல அதிலேயும் இந்த மாதிரி புலம் பெயர்ந்த சமூகங்கள்ல எப்படி மொழி வாழுது அப்படின்னு யோசிக்கும்பொழுது இந்த “எழுத்துத் தமிழ் தான் உயிர்நாடி”ன்னு தோணுது

நான் இந்த மொழியிலாளர்களோடு பேசும்போது எழுத்துத் தமிழை எந்த காலத்துலேயும் விடக்கூடாதுன்னுதான் சொல்வேன். ஆனா பேச்சுத் தமிழ் நமக்கு அவசியமாகிறது. அதற்கு முதல் ஆதரவாளர் நான்தான். எழுத்துத்தமிழ் நம்மிடம் வேரூன்றி இருக்க வேண்டும் என்பதுதான் அறிஞர்களின் கருத்தும் கூட. அதனாலதான் ஊடங்களில், தொலைகாட்சிகளில் சில நிகழ்ச்சிகளாவது எழுத்துத் தமிழில் இருக்கணும்.
மஹேஷ்: முத்து…. அப்ப இந்த மாதிரி ஒரு பேச்சுத்தமிழ்ல நாம கொண்டு போகனும்னா.. அச்சு இதழில் கொண்டு போகமுடியாது. அச்சுத் தமிழ்ல standard தமிழ் இருக்கட்டும். இணையத்தில் கொண்டு போகும்போது geographicalஆக எங்கேருந்து login பன்றாங்கன்னு பார்த்து,இலங்கையில் பன்றாங்கன்னா அவங்களுக்கு இலங்கைத் தமிழ்லயும், இந்தியாவில் login பன்றாங்கன்னா அவங்களுக்கு இந்தியத் தமிழ்லேயும் வர மாதிரி பண்ணிட்டு இருக்காங்களா?


முத்து நெடுமாறன்: தமிழ்ல அந்த மாதிரி பண்றதா தெரியலை. அதாவது ஒரு dialect அந்த அடிப்படையில் localisation பண்ண முடியுமாங்கிறது அந்த துல்லியம் இன்னும் வரல. ஆனா மொழி கட்டாயம் வருது. நான் இப்ப சிங்கப்பூர்ல இருந்து ஒரு தளத்துக்கு போறேன்னா ஆங்கிலத்தில் வருது. மலேசியாவில் இருந்து போறேன்னா மலாய்ல வருது. நானே வந்து ஆங்கிலத்துல குடுன்னு கேட்கும்படி ஆகுது. Locationக்கு ஏற்றவாறு பார்த்துக் கொடுக்குது.
வட்டார மொழிகளுக்கு அடிப்படையில அதற்கான வசதி இருக்கு. ஆனால் தொழில்நுட்பத்தில் அதற்கு எந்த வசதியும் கிடையாது. ஆனா நாம போய் தேடி பண்ணனும். இங்க போனா இதுல பண்ணனும், அங்க போனா அதுல பண்ணனும் என்கிற தரவுகள் இன்னும் நமக்கு வரலை. Localisation இருக்கு அதுல துல்லியம் வரலை. ஆனால் நாட்டளவில் வேலை செய்யலாம்.


கனகலதா: பேச்சுத்தமிழ் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். ஒரு நிமிஷச் செய்தியில் முக்கிய செய்திகளை பேச்சுத் தமிழேயே சொல்கிறார்கள். யாரும் எழுதிக் கொடுப்பதில்லை. நாம் தெளிவாகத்தான் எழுதுகிறோம். சில சமயத்தில் இந்திய தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது மாதிரி எழுத்துத் தமிழே நிறைய பாகுபாடு இருக்கும்போது பேச்சுத் தமிழில் நிறைய இருக்கும். நாம தேதின்னு போடுவோம் அங்க “திகதி” ன்னு போடுவாங்க. இது மாதிரி எழுத்து தமிழிலேயே நிறைய பாகுபாடு இருக்கும்போது பேச்சுத் தமிழ்ல புதுசா தமிழ் படிக்கிறவங்களுக்கு இவைகள் எல்லாம் ஒரு நெருக்கடியாக அமையலாம்