மொழிபெயர்ப்புக் கவிதை

0
348
மஹேஷ்

கூரைக்கு மேலே வானம்

கூரைக்கு மேலே வானம்
அதன் நீலம்…மௌனம்.
கூரைக்கு மேலொரு மரம்
அதன் அசைவு…யௌவனம்.
வானில் நீ காணும் அந்த மணியின்
குரல்…மென் சிணுங்கல்.
மரத்தின் மீது நீ காணும் பறவையின்
கீச்சு… மென் முணுங்கல்.
இறையே.. இறையே.. இதுவே வாழ்வு !!
எளிமை… அமைதி.
அங்கே ஏதோ சலசலப்பு
நகரத்தில் இல்லாத அமைதி.
அகோ !! அப்படி என்ன செய்தாய்?
முடிவின்றி அழுகிறாய்…
சொல் !! அப்படி என்ன செய்தாய்?
இளமையை இழக்கிறாய்…
[email protected]

கவிஞர் பற்றிய குறிப்பு

பால் வெர்லைன்

19ஆம் நூற்றாண்டின் சிறந்த ஃப்ரெஞ்சுக் கவியாகப் போற்றப்படுபவர். இவருடைய கவிதைகளில் உள்ள பல் அடுக்குப் படிமங்களுக்காகவே இயல்பியத்துக்கும் மெய்மையியத்துக்கும் எதிரான குறியீட்டியத்தை ஒரு இயக்கமாகவே ஆக்கியவர் என்றும் ஒரு நூற்றாண்டின் அடையாளம் என்றும் நினைவுகூறப்படுகிறார்.

இவருடைய கவிதைகள் ஃப்ரெஞ்சிலும் சரி ஆங்கிலத்திலும் சரி, நல்ல ஓசை நயத்துடன் எதுகையும் சிறப்பாக அமையும்.
அதே வகையில் தமிழிலும் கொடுக்க முயன்றேன்.